ETV Bharat / state

வேலூரில் டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய சோதனை - raid on Tasmac stores

வேலூர்:  டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 61 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூரில் டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய சோதனையில் ஈடுப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை!

author img

By

Published : Oct 30, 2020, 10:50 AM IST

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை, பென்னாத்தூரில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய நடத்தி வந்த விசாரணை நிறைவடைந்தது. அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரினை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று(அக். 29) திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் பெண்ணாத்தூரில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளிலும் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையிலும் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

நேற்று(அக். 29) இரவு 8 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதில் கணக்கில் வராத 61 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதில், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் இருந்து கணக்கில் வராத 12 ஆயிரம் பணம், 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பென்னாத்தூரில் ஒரு கடையில் இருந்து 14 ஆயிரத்து 720 ரூபாயும், மற்றொரு கடையில் இருந்து (கடை எண்:11120) 34 ஆயிரத்தி 270 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே கடையில் சுமார் நான்கு லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்க வெளியில் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூரில் சோதனை செய்ய மூன்று டாஸ்மாக் கடைகளில் மொத்தம் 60,990 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபாட்டில்கள் மீது கூடுதலாக விலை வைத்து விற்பதாக வந்த தொடர் புகாரை அடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.