ETV Bharat / state

VIT University; கிராமப்புற மாணவர்கள் கல்விக்காக ரூ.12 லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்கள்! - கல்விக்காக ரூ 12 லட்சம் நன்கொடை

விஐடி பல்கலைக்கழகத்தில் stars திட்டத் தின் கீழ், நடந்த 'ஸ்டார்ஸ் மாணவர்கள் சந்திப்பு' நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்னசெண்ட் திவ்யா ஐஏஎஸ், 'பல்வேறு கட்டங்களாக அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சியடைந்து சமூக சேவை செய்ய முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கிராமப்புற மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டத்தின் கீழ் ஸ்டார்ஸ் நாள் நிகழ்ச்சி

author img

By

Published : May 28, 2023, 7:12 PM IST

ஸ்டார்ஸ் திட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் கல்விக்காக ரூ.12 லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

வேலூர்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.12 லட்சம் நன்கொடை அளித்த முன்னாள் பல்கலைக்கழக ஸ்டார்ஸ் (Stars) மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என்றும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக (VIT University, Chennai) கிராமப்புற மாணவர்களின் கல்வி திட்டம் ஸ்டார்ஸ் நாளில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை வழங்கினார்.

கிராமப் புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.12 லட்சம் பணத்தை நன்கொடையாக முன்னாள் பல்கலைக்கழக ஸ்டார்ஸ் மாணவர்கள் அளித்துள்ளனர். வளர்ந்துவரும் அறிவியல் உலகிற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா (Innocent Divya IAS) நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் Stars திட்டத் தின் கீழ் கிராம பகுதிகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி அளித்து வருகிறது. இதனையடுத்து ஸ்டார்ட்ஸ் மாணவர்கள் சந்திப்பு இன்று (மே 28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா அந்நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

இதையும் படிங்க: "புதிய நாடாளுமன்ற கட்டடம் எம்.பி.க்களுக்கு உத்வேகம் அளிக்கும்" - சபாநாயகர் ஓம் பிர்லா!

அப்போது நிகழ்ச்சியில் பேசிய இன்னசென்ட் திவ்யா, 'மாணவர்கள் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையோடு உயர் பதவிக்கு வர வேண்டும். கல்வியால் மட்டுமே ஒருவர் உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

நல்ல சிந்தனையோடு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் அறிவியல் உலகிற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் காண முடியும். அரசு பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்று அதில், தேர்ச்சி பெற்று உயர் பதவிகளை பெறலாம்' என்று அறிவுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், 'தமிழகத்தில் இன்றைக்கு உயர்கல்வி படிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என மாணவர்கள் மத்தியில் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், ரூ.12 லட்சத்தை நன்கொடையாக மாணவர்கள் அளித்ததை வெகுவாக பாராட்டினார். மேலும், முன்னாள் மாணவர்களின் இம்மாதிரியான செயல்கள் பெரிது வரவேற்கப்படுவதாக பெருமிதம் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: Madras High Court: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.