ETV Bharat / state

முகிலன் மீட்பு: வேலூரில் காவல்துறையினர் விசாரணை - தமிழகம் வருகிறார் முகிலன்

வேலூர்: ஆந்திராவில் மீட்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை, காட்பாடி பாதுகாப்புப்படை அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

mukilan
author img

By

Published : Jul 7, 2019, 7:27 AM IST

சமூக செயற்பாட்டாளரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாயமானார்.

இதனையடுத்து எழும்பூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. மேலும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் அம்மாநில ரயில்வே காவல் துறையினர் நேற்று இரவு முகிலனை மீட்டனர்.

பின்னர், பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டது.

அங்கு, வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், சிபிசிஐடி அலுவலர்கள் முகிலனிடம் 30 நிமிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டார்.

காட்பாடியில் முகிலனிடம் காவல் துறையினர் விசாரணை செய்யும் காட்சிகள்

அப்போது முகிலன், "தடை செய்...தடை செய்... ஸ்டெர்லைட் ஆலையைத் தடை செய்" என்று ஆக்குரோசத்தோடு முழக்கமிட்டார்.

இதனால் காட்பாடி ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதை அறியாத பயணிகள் என்னவோ ஏதோ என்று வியப்புடன் பார்த்தனர்.

முகிலனுக்கு ஆதரவாக சில இளைஞர்களும் முழக்கமிட்டனர். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனம் மூலம் முகிலன் அழைத்துச் செல்லப்பட்டார்.

வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முகிலனை, அங்கிருந்து சென்னைக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Intro:ஆந்திராவில் மீட்கப்பட்ட முகிலனிடம் வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் போலீசார் விசாரணைBody:சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில மாதங்களாக மாயமானார் இந்த நிலையில் ஆந்திர ரயில்வே போலீசார் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இன்று மீட்கப்பட்டார் இதையடுத்து ஆந்திரா ரயில்வே போலீசார் முகிலனை நேற்றிரவு பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர் அங்கு வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் சிபிசிஐடி போலீஸார் முகிலனிடம் சுமார் அரை மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணை முடிந்த பிறகு முகிலன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். அப்போது முகிலன் தடை செய் தடைசெய் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என்று ஆவேசத்துடன் கோஷம் எழுப்பினார். இதனால் காட்பாடி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது இதை அறியாத பயணிகள் என்னவோ ஏதோ என்று வியப்புடன் பார்த்தனர் முகிலனுக்கு ஆதரவாக சில இளைஞர்களும் கோஷமிட்டனர் இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார் வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகிலன் அங்கிருந்து சென்னைக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.