ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீச்சேரி பகுதியைச் சேர்ந்த சிலர், சிறுவளையம் கிராமத்திற்கு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவதற்காக, மினி லோடு வேனில் 20 பேர் சென்றனர். அப்பொழுது மினி வேன் நெமிலி அருகே வந்தபோது, நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கீச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கவிதா, சமாதானம் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில், 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவசர ஊர்தியில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விபத்து குறித்து நெமிலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் அடுத்த பரபரப்பு: பரமசிவன் கோயில் அருகே கிடந்த முதியவரின் தலை!