ETV Bharat / state

வேலூர் ஆவின் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. தயிர் விநியோகம் பாதிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் ஆவின் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் ஆவின் தயிர் விநியோகம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 12, 2023, 3:49 PM IST

வேலூர் ஆவின் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. தயிர் விநியோகம் பாதிப்பு

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஒன்றிய பால் பண்ணையில் தினசரி 93 ஆயிரம் லிட்டர் பால், 5 ஆயிரம் லிட்டர் தயிர் மற்றும் 1500 பாட்டில் மோர் உற்பத்தி செய்யப்பட்டு வேலூருக்கு 75 ஆயிரம் லிட்டர், திருப்பத்தூருக்கு 5 ஆயிரம் லிட்டர், திருவண்ணாமலைக்கு 13ஆயிரம் லிட்டர், ஒன்றியங்களுக்கு 21 வாகன வழித்தடங்கள் மூலம் விநியோகம் பால் முகவர்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (பிப்.12) ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக வேலூர் மாவட்ட ஆவின் பால் பண்ணையில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, வாணியம்பாடி, குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் தயிர் பாக்கெட்டுகள் முழுமையாக விநியோகம் செய்யப்படவில்லை.

முகூர்த்த நாளான இன்று பால் முகவர்கள் ஏற்கனவே ஆர்டர் கொடுத்து, அதற்குரிய பணமும் ஆவினுக்கு செலுத்தியுள்ள நிலையில் வேலூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கினால் தயிர் விநியோகம் தடைப்பட்டு பொதுமக்களும், பால் முகவர்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைகள் ஓராண்டுக்கும் மேலாக தொடர்கதையாகி வரும் சூழலில், அதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காத, ஆவின் நிர்வாகத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகத்தெரிவித்துள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘பேராசிரியரை முதலில் மேடையேற்றியது அண்ணாதான்’ - வைகோ பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.