வேலூர்: பள்ளிகொண்டாவில் உள்ள மின் பகிர்மானக்கோட்ட அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வருபவர், கார்த்திகேயன். இவர் ராஜா என்ற தனி நபரை புரோக்கராக வைத்துக்கொண்டு மின் இணைப்பு பெற வரும் பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்காட்டிலும் கூடுதலாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல் தனது இருக்கையில் அமர்ந்திருக்கும் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஒரு நபரிடம் கவர் வாங்குவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து பள்ளிகொண்டா செயற்பொறியாளர் விஜயகுமார் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ’இது தொடர்பாக புகார்கள் ஏதும் இதுவரை வரப்படவில்லை; இருந்தபோதும் இதுகுறித்து விசாரிக்கப்படும்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க:எனது பாதுகாப்பை இழந்ததாக கருதுகிறேன்... நெல்லை கண்ணன் இறுதியஞ்சலியில் பங்கெடுத்த திருமாவளவன்