ETV Bharat / state

மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் - பட்டியலின மலையாளி பேரவை சங்கம் கோரிக்கை - தார் சாலை அமைக்க வேண்டும்

மலை கிராமத்திற்கு தார் சாலையை அமைக்க ரூ. 5.11 கோடி நிதி ஒதுக்கியும் சாலை அமைக்கவில்லை எனவும்; உடனடியாக அதனை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு எஸ்டி மலையாளி பேரவையின் மாநில செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 5, 2023, 10:20 PM IST

வேலூர்: அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை மலையில் தமிழ்நாடு எஸ்டி மலையாளி பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச்.04) நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தாமேதரன், பொருளாளர் வேலு முன்னிலை வகித்தனர்.

இதில் மலையாளி பேரவை சங்கத்தின் மாநிலத் தலைவர் வரதராஜி, பொதுசெயலாளர் மோகன், மாநில பொருளாளர் வெள்ளையன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்காளாக பங்கேற்று மலைவாழ் மக்களின் உரிமைகள், சட்டங்கள், அவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், அதில் எவ்வாறு பயன்பெறுவது என விளக்கம் அளித்து பேசினார்.

கூட்டத்தில் தொடர்ந்து பேசியதில், 'முத்துகுமரன் அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை மலைவரை தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக டெண்டர் விட்டும் இதுவரை சாலை அமைக்கும் பணியினை துவங்கவில்லை; எனவே இதனை விரைவாக தொடங்க வேண்டும் எனவும்; தாமதம் ஆகும் பட்சத்தில் வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

பீஞ்சமந்தை ஊராட்சியில் 40க்கும் மேற்பட்ட குட்கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிப்பதால் அவர்களின் நிர்வாக நலனை கருதியும் பீஞ்சமந்தை ஊராட்சியை பிரிந்து தேந்தூர், அல்லேரியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சிகள் உருவாக்கி 3 ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படும் வன உரிமை பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும்; ஜார்தான்கொல்லை முதல் துத்திக்காடு வரை தார்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து வனநிலங்களில் காலங்காலமாக பயிரிடப்பட்டு வரும் நிலத்திற்கு பட்டா வேண்டியும், குக்கிராமங்களை இணைக்கும் புதிய தார்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் மாநில நிர்வாகிகளிடம் மலைவாழ் மக்கள் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என மாநிலப் பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர்.

இந்த கூட்டத்தில் பீஞ்சமந்தை முன்னாள் ஊராட்சித் தலைவர் கோவிந்தன், திருச்சி, சேலம், நாமக்கல், கள்ளகுறிச்சி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 9 வெளிமாவட்டங்களை சேர்ந்த பேரவையின் பொறுப்பாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் என கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை மலையில் நடந்த தமிழ்நாடு எஸ்.டி. மலையாளி பேரவையின் மாநில செயற்குழு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வன உரிமை பட்டா சார்ந்த கோரிக்கை மனுக்களை மாநில தலைவர் வரதராஜி பெற்றுக்கொண்டார். அவருடன் வேலூர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் இருந்தார்.

இதையும் படிங்க: யானை தாக்கியதில் இருவர் அடுத்தடுத்து உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.