ETV Bharat / state

தாய் தந்தைக்கு கோயில் கட்டிய அதிசய மனிதர் !

வேலூர்: இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், ஒருவர் தனது தாய் தந்தைக்கு கோயில் கட்டி விழா நடத்தியுள்ளார்.

தாய் தந்தைக்கு கோயில் கட்டிய அதிசய மனிதர் !
author img

By

Published : Jun 16, 2019, 5:28 PM IST

உலகம் முழுவதும் இன்று(16/06/2019) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு குழந்தையை வளர்ப்பதில் தாயின் பங்களிப்பு எவ்வளவு உள்ளதோ அதைவிட ஒரு மடங்கு கூடுதலாகவே தந்தையின் பங்களிப்பு இருக்கும்.

வேலூரில் தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கு கோயில் கட்டி, ஒருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை செங்காநத்தம் ரோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் தாய் தந்தைக்கு கோயில் கட்டி பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை வெள்ளை நாயக்கர், தாய் ஜெகதாம்பாள். தந்தை இவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், சிறந்த நண்பனாகவும், சிறந்த ஆசிரியராகவும் விளங்கியுள்ளார்.

தாய் தந்தைக்கு கோயில் கட்டிய அதிசய மனிதர் !

தாய் ஜெகதாம்பாள் தனது இளமைப் பருவம் முதல் கடினமாக உழைத்து தனது குடும்பத்தை வழிநடத்தி வந்துள்ளார்.

தனது இளமைப் பருவத்தில் பெற்றோர்களின் பாசத்தையும் தியாகத்தையும் உணராத ராமச்சந்திரன், அவர்களது மறைவுக்குப் பிறகு மிக உயரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்.இந்த சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வெள்ளை நாயக்கர் காலமானார். கணவனை இழந்து வாடிய ஜெகதாம்பாளும் சில காலத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாரதியார் நகரில் தனது வீடு அருகில் தனக்கிருந்த சொந்த நிலத்தில் தாய் ஜெகதாம்பாள், தந்தை வெள்ளை நாயக்கர் ஆகிய இரண்டு பேருக்கும் ராமச்சந்திரன் கோயில் எழுப்பியுள்ளார்.

இரண்டு பேரின் உடலையும் புதைத்து, அதன்மேல் இரண்டு பேருக்கும் சுமார் 6 அடி உயரம் உள்ள வெண்கல சிலையை எழுப்பியுள்ளார். ஒவ்வொரு சிலையும் தலா ரூ 7 லட்சம் மதிப்புள்ளது . வெறும் சிலைகளை மட்டும் வைக்காமல் கோயிலைப் போன்று கருவறை அமைத்து தந்தை தாய் சிலைகளுக்கு முன்பு சிவன் சிலையும் அமைத்துள்ளார்.

அதேபோல் கருவறைக்கு முன்பு வழிபடுவதற்கு ஏதுவாக கோயிலைப் போன்றே வடிவமைத்து கம்பிகளை நிறுவியுள்ளார். தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய ராமச்சந்திரன் தினமும் தனது தாய் தந்தைக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

மேலும் ஆண்டுதோறும் தனது தந்தையின் நினைவுநாளில் கோயிலில் விழா எடுத்து அப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம், துணிகள் வழங்கி ராமச்சந்திரன் சிறப்பித்துள்ளார். ராமச்சந்திரனின் இந்த செயலைப் பார்த்து ஊர் மக்கள் மிகவும் வியந்தனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமச்சந்திரன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது ராமச்சந்திரன் மனைவி மண்ணம்மாள்(51), மகள்கள் முனியம்மாள், சுஜாதா, மகன் தண்டபாணி ஆகியோர் அவர் கட்டி எழுப்பிய கோயிலை பொறுப்புடன் பராமரித்து வருகின்றனர்.தனது கணவனுக்கு பதில் மண்ணம்மாள் தினமும் தனது மாமனார் மாமியாருக்கு பூஜை நடத்தி வருகிறார்.

தந்தையர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் பெற்ற தாய் தந்தைக்கு கோயில் கட்டி வழிபடும் குடும்பத்தை இன்றும் வேலூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Intro:Body:

Fathers day spl meenal

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.