வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் காளியப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வன விலங்குகளுக்காக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் விஜயகுமார் என்பவர் அந்த நிலத்தின் வழியாக வேட்டைக்குச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராவிதமாக நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளிகொண்டா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு நில உரிமையாளர் காளியப்பனை தேடி வருகின்றனர்.