ETV Bharat / state

வாணியம்பாடியில் கொடிய விஷப்பாம்பு பிடிபட்டது!

வேலூர்: வாணியம்பாடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித்திரிந்த கொடிய விஷப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

snake
author img

By

Published : Nov 5, 2019, 1:12 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது மேட்டுப்பாளையம். நூற்றுக்கும் மேற்ப்பட்டகுடியிருப்புகள் உள்ளன. இங்கு, இரவு நேரங்களில் கொடிய விஷத் தன்மை கொண்ட பாம்புகள் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு குடியிருப்புப் பகுதியில் திடீரென கொடிய விஷத்தனமை கொண்ட மூன்று பாம்புகள் சுற்றித் திரிவதை பொதுமக்கள் கண்டு அச்சம் அடைந்து பாம்பு பிடிக்கும் நபர் இலியாஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இலியாஸ் வருவதற்குள் இரண்டு பாம்புகள் அருகில் உள்ள ஒரு புதருக்குள் சென்று மறைந்து விட்டது. மேலும் ஒரு பாம்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்தது.

பாம்பை பிடிக்கும் இலியாஸ்

அங்கு வந்த இலியாஸ் வீட்டிற்குள் சென்று அங்கு பதுங்கியிருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். மேலும் புதருக்குள் புகுந்த இரு பாம்புகளை பிடிக்க இயலவில்லை.அதனால், தப்பிச்சென்ற இரு பாம்புகள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் அவற்றை தேடி வருகின்றனர்.

பாம்பை பிடித்த இலியாஸ் கூறுகையில், பிடிபட்ட பாம்பு மற்ற பாம்புகளை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது என்றும் ராஜ நாகம் இனத்தை சார்ந்த பாம்பாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுவதாகவும் கூறினார். பிடிபட்ட அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கிணற்றில் தத்தளித்த 4 அடி நீள நாகப்பாம்பு மீட்பு

Intro:வாணியம்பாடி அருகே இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கொடிய விஷத் தன்மை கொண்ட 3 பாம்புகள் சுற்றி தரிந்ததால் பொதுமக்கள் பீதி.ஒரு பாம்பு மட்டுமே பிடிப்பட்டது பிடிபட்ட பாம்பு ராஜ நாகம் இனத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்று கூறி புதருக்குள் மறைந்த மேலும் 2 பாம்புகளை தேடி வருகின்றனர்.
Body:
வேலூர் மாவட்டம்

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் உள்ள வீதியில் இரவு திடீரென்று கொடிய விஷத்தண்மை கொண்ட 3 பாம்புகள் சுற்றி திரிந்துள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்து பாம்பு பிடிக்கும் நபர் இலியாஸ் என்பவரை அழைத்துள்ளனர்.அவர் அங்கு வருவதற்குள் ஒரு பாம்பு மட்டும் அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தஞ்சமடைந்தது.மற்ற இரண்டு பாம்புகள் அருகில் உள்ள ஒரு புதருக்குள் சென்று மறைந்துவிட்டது.பின்னர் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு பதுங்கியிருந்த ஒரு பாம்பினை லாவாகமாக பிடித்துவிட்டார்.

மேலும் புதருக்குள் புகுந்த இரண்டு பாம்புகளை பிடிக்க முடியவில்லை.எந்த நேரத்திலும் அந்த இரண்டு பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்ற பீதியில் அப்பகுதி மக்கள் அந்த 2 பாம்புகளை தேடி வருகின்றனர்.
பிடித்த அந்த கொடிய விஷ பாம்பினை பார்த்தல் ஒரு வித்தியாசமாக உள்ளது அந்த பாம்பு ராஜ நாகம் இனத்தை சார்ந்த பாம்பாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.பிடிபட்ட அந்த பாம்பினை வனத்துறையினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.