திருப்பத்தூர் அடுத்த பணியாண்ட பள்ளியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சேட்டு. இவருடைய மகன் முருகேசன் (33) . இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளது. இவர் புதுப்பேட்டை பகுதியில் மரபட்டறையில் கூலி வேலை செய்கிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் முருகேசன் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி சேட்டும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் வீரப்பள்ளி அருகே காசி என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் ஒரு இருசக்கர வாகனம் நிற்பதைக் கண்ட பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்த போது உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவாறு ஒரு சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் முதற்க்கட்ட விசாரணையில் தூக்கில் தொங்கியவாறு இருக்கும் சடலம் முருகேசன் தான் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.