வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கணவாய்புதூர் கிராமம். நேற்று இரவு இக்கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.
பாம்பு குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாம்பை பார்பதற்காக ஒன்று கூடினர். அப்போது, அந்த மலைபாம்பு கூடியிருந்த பொதுமக்கள் மீது சீறிப் பாய்ந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்பவரை அழைத்துள்ளனர்.
அங்கு வந்த இலியாஸ் அந்த மலைப்பம்பினை தன்னுடைய பாணியில் லாவாகமாக பிடித்து ஒரு பையில் அடைத்தார். அதனைத் தொடர்ந்து, பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்து சென்றார்.
மேலும், மலைப்பாம்பு பொதுமக்கள் மீது கொத்துவதுபோல் சீறிப் பாய்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொழிலாளரின் கழுத்தில் ஏறி சௌக்கியமா எனக் கேட்ட மலைப்பாம்பு...!