ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தில் 8 நாட்களில் 547 பேருக்கு டெங்கு காய்ச்சல்! - தண்ணீர் இணைப்பு நிறுத்தி வைக்க நடவடிக்கை

வேலூர்: 8 நாட்களில் 547 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தொடர்ந்து டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டால் குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

collector statemen
author img

By

Published : Oct 13, 2019, 3:21 PM IST

வேலூரில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் பரவலாக தொடர் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கிச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அப்போது இருந்தே குடியாத்தம், திருப்பத்தூர், அரக்கோணம், லத்தேரி உள்பட வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாள்தோறும் டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கடந்த எட்டு நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 547 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் முதல்முறை 500 ரூபாயும், இரண்டாவது முறை 1000 ரூபாயும், 3வது முறை 1500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. இது தொடர்ந்து கண்டறியப்பட்டால் ஒவ்வொரு வீட்டின் தண்ணீர் இணைப்பு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கவும்; புதிய கட்டடங்கள், பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து கொசுக்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கவும்' மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - கார் சர்வீஸ் சென்டர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்!

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 792 பேருக்கு டெங்கு காய்ச்சல் - 8 நாளில் 547 பேர் டெங்குவால் பாதிப்பு - வீடுகளில் தொடர்ந்து டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டால் குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும் -மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கைBody:வேலூர் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது இதனால் பொதுமக்கள் குழந்தைகள் உள்பட பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் வேலூரில் கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் பரவலாக தொடர் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது அப்போதிருந்தே குடியாத்தம் திருப்பத்தூர் அரக்கோணம் லத்தேரி உள்பட வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பொதுமக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் இவர்கள் ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் நாள்தோறும் டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவனைக்கு படையெடுத்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை 245 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக கடந்த 4ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார் இந்த நிலையில், தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக இன்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார் இதன்மூலம் கடந்த 8 நாட்களில் எட்டு நாட்களில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 547 இருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சி அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார் அரக்கோணம் நகராட்சி பகுதிகளில் 36 இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு முன்னெச்சரிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் நகராட்சியில் மட்டும் இதுவரை 42 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது அதேபோல் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளில் இதுவரை 6 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் மொத்தமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது கடந்த வருடம் 348 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது இந்த ஆண்டு இதுவரை 792 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது இதில் 135 பேர் வேலூர் மாநகராட்சியில் 117 பேர் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பகுதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது டெங்கு கொசு வீட்டிலுள்ள நல்ல தண்ணீரில் தான் அதிகமாக உருவாகிறது டெங்கு கொசு புழுக்கள் ஒழிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வீடுகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார் வீடுகளில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் முதல் முறை 500 இரண்டாவது முறை 1000 3வது முறை 1500 அபராதம் விதிக்க வேண்டும் தொடர்ந்து கண்டறியப்பட்டால் வீட்டு தண்ணீர் இணைப்பு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கவும் புதிய கட்டிடங்கள் பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து கொசுக்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ 25 ஆயிரம் முதல் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்" என்று கூறப்பட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.