வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் விவசாய கிணற்றில் பத்தடி நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரிடம் தகவல் கூறியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் ஆற்காடு வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
சேர்க்காடு வன அலுவலர் கந்தசாமி தலைமையில் வந்த வன அலுவலர்கள் கிணற்றில் இறங்கி மலைப்பாம்பினை பிடித்தனர். வன அலுவலர்கள் அந்த மலைப்பாம்பை அருகிலுள்ள வின்னம்பள்ளி காப்புக் காட்டில் கொண்டு விட்டனர்.