ETV Bharat / state

மது அருந்துவதை கண்டித்ததால் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை! - youth commit suicide

திருச்சி: மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துவதைக் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Aug 11, 2020, 3:34 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணியின் மகன் சோபியாஸ் (17). இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு, தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்தார். கடந்த சில மாதங்களாக அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சோபியாஸ் நேற்றிரவு (ஆகஸ்ட் 10) வீட்டைவிட்டு வெளியேறுவதாக கூறிச் சென்றார். இதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 11) காலை காரைமேட்டுப்பட்டி பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சோபியாஸை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சோபியாஸ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:விஜயமங்கலத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.