ETV Bharat / state

லெக்கின்ஸில் தங்கம் கடத்திய பெண் - சிக்கியது எப்படி? - திருச்சி செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் பெண் ஒருவர் லெக்கின்ஸில் மறைத்து தங்கம் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatலெக்கின்ஸில் தங்கம் கடத்திய பெண் - சிக்கியது எப்படி?

author img

By

Published : Nov 25, 2022, 2:21 PM IST

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள், உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர்,துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (நவ.24) கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்ததால் அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பெண் அணிந்து வந்த லெக்கின்சில் 105 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கமும் ,30 கிராம் எடையுள்ள தங்க செயினும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து மொத்தம் 135 கிராம் எடையுள்ள ரூ.7 கோடியே 7 லட்சத்து 895 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

லெக்கின்ஸில் தங்கம் கடத்திய பெண் - சிக்கியது எப்படி?

அதேபோல் மற்றொரு பெண் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பெண் அணிந்து வந்த உள்ளாடையில் 57 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கமும், 30 கிராம் எடையுள்ள தங்க செயினும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து மொத்தம் 87 கிராம் எடையுள்ள 4 லட்சத்து 51 ஆயிரத்து 911 ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு பெண் பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:SIM Box மூலம் வெளிநாடுகளுக்கு அழைப்பு - 2 பேருக்கு தீவிரவாத தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.