ETV Bharat / state

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியவில்லையா : இதை செய்தாலும் புண்ணியம் தான்... - What to do on the day of Atsya Tritiya

சரி அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க இயலாதவர்கள் என்ன செய்யலாம் அல்லது அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்குவது கட்டாயமா என்பது குறித்து பார்க்கலாம்.

அட்சய திருதியை நாளில் என்ன செய்ய வேண்டும்  அட்சய திருதியை இன்று கொண்டாட்டம் - அதிகாலையிலேயே நகைக்கடைகள் திறப்பு

author img

By

Published : May 3, 2022, 9:53 AM IST

Updated : May 3, 2022, 12:46 PM IST

தங்கம் வாங்க எங்ககிட்ட வாங்க அட்சய திருதியை நாளில் நகைக்கடைகள் கூவி அழைப்பதைக் கடந்த சில ஆண்டுகளாகக் கண்டிருப்போம் இன்றைக்குத் தங்கம் விற்கும் விலையில் ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது கூட கடினம். அது நடுத்தர மக்களாக இருக்கட்டும், ஏழை மக்களாக இருக்கட்டும், கஷ்டம் தான்.

சரி அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க இயலாதவர்கள் என்ன செய்யலாம் அல்லது அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்குவது கட்டாயமா ? என ஸ்ரீதர் சாஸ்திரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டோம் அவர் கூறியது நேயர்களின் பார்வைக்கு, "ஆண்டுக்கு ஒருமுறை வரும் அதிசய நாள் “ அட்சய திரிதியை ” ‘குறைவு இல்லாதது’ என்பது இதன் பொருள். இந்நாளில் தயிர் சாதம் தானம் செய்தால் மகாலட்சுமி மனம் குளிர்வாள்.

இந்நாளில் எதைச் செய்தாலும், அதன் பலன் ஆயிரம் மடங்காக நமக்குத் திரும்ப வரும். சுயநலம் இன்றி 'பிறருக்கு' உதவுவது அவசியம். உணவு, உடை, கல்விக்கு உதவி, முதியவருக்குப் பண உதவி என தர்மம் செய்தால் குடும்பத்தில் 21 தலைமுறைக்கும் புண்ணியம் தொடரும். இந்த வாய்ப்பை நழுவ விடலாமா ? என எதிர் கேள்வி கேட்டவர் அன்றைய தினம் நடந்த நல்ல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போனார்.

அட்சய திருதியை நாளில் நகைக்கடைகள்
அட்சய திருதியை நாளில் நகைக்கடைகள்
அட்சய திருதியை நாளில் என்ன செய்ய வேண்டும்

அட்சய திருதியையன்று புது நகை வாங்க எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. அட்சய திருதியை என்பது ஒரு சிறப்பு வாய்ந்த நாள். இந்நாளில் பொன் நகைகள் வாங்கினால் சுபிட்சம் பெருகும் என்று இந்து தர்ம சாஸ்திரம் எதுவும் கூறவில்லை, வீட்டில் உள்ள பழைய நகையைச் சுத்தம் செய்து லட்சுமி, குபேரர் முன்பை வைத்து பூஜை செய்தாலே இந்நாள் விசேஷமானதாக இருக்கும், அன்றைய தினம் கனகதாரா ஸ்தோத்திரத்தை லட்சுமி தேவியின் முன்பு பாராயணம் செய்தால் சகல ஐஸ்வர்யம் குடும்பத்திற்கு கிடைக்கும்.

தங்கம்
தங்கம்

அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள்

  • பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..!
  • கங்கை நதி பூமியைத் தொட்ட நாள்..!
  • திரேதா யுகம் ஆரம்பமான நாள்..!
  • குசேலர் கிருஷ்ண பகவானைச் சந்தித்த நாள்..!
  • வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!
  • பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!
  • ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!
  • குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!
  • அன்னபூரணி தேவி அவதரித்த நாள்..!
  • இந்நாளில் தான, தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும்.
    ஸ்ரீதர் சாஸ்திரிகள்
    ஸ்ரீதர் சாஸ்திரிகள்

இந்த நாளில் வீட்டிலுள்ள பல்லிகள் யார் கண்ணிலும் தென்படாமல் மறைந்து விட வேண்டும் என்பது வாஸ்து பகவான் கட்டளையிட்ட நாளாகவும் கூறுவார்கள்..ஒருசிலர் பல்லியை வழிபடவும் செய்வார்கள். இந்த அட்சய திருதியை நாளன்று பல்லியை கண்டு விட்டால் எல்லா பீடைகளும் நீங்கி, திரிஜென்ம பாபமும் நீக்கப்பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று லட்சுமி கடாக்ஷத்துடன் வாழ்வர் என்று நம்பப்படுகிறது" என கூறி அசரடித்தார்.

இதையும் படிங்க: அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 1

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 2

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 3

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 4

Last Updated : May 3, 2022, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.