ETV Bharat / state

ஒரு மாதமாகியும் எங்களுக்கு வேலை இல்லை - நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் சாலை மறியல் - திருச்சி வையம்பட்டி நூறு நாள் பணியாளர்கள்

திருச்சி: வையம்பட்டி அருகே ஆணையூரில் ஒரு மாதமாகியும் தங்களுக்கு வேலை இல்லை என்று கூறி நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்கள்
நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்கள்
author img

By

Published : Jun 18, 2021, 3:55 PM IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆணையூர் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக நூறு நாள் வேலை திட்டப்பணி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் செவிசாய்க்காததால் கொந்தளித்த அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் இன்று காலை அரிவாள், மண்வெட்டி உள்ளிட்ட விவசாய கருவிகளுடன் சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வையம்பட்டி ஒன்றியத் தலைவர் குணசேகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேலை வழங்கினார்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இந்தச் சாலை மறியலால் தரகம்பட்டி-மணப்பாறை சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.