ETV Bharat / state

வக்ஃபு வாரிய நிர்வாக அதிகாரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா - நிர்வாக அதிகாரியை உடனடியாக கைது செய்ய வேண்டும்

கிராமம் முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய வக்ஃபு வாரிய முதன்மை நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வக்ஃப் வாரிய நிர்வாக அதிகாரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

author img

By

Published : Sep 16, 2022, 12:26 PM IST

Updated : Sep 16, 2022, 1:05 PM IST

திருச்சி: ஜீயபுரம் அருகே திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வக்ஃபு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பன்குளம், பெரியநாயக்கசத்திரம், சித்தாநத்தம், கொமக்குடி, மணமேடு, பாகனூர் ஆகிய 6 கிராமங்களும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்து எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது பெயர்களில் உள்ள சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருச்செந்துறை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன் தலைமையில், திருச்செந்துறை கிராம மக்களுக்கும், வக்ஃபு வாரிய அதிகாரிகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வக்ஃபு வாரிய நிர்வாக அதிகாரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

இதன் முடிவில், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் இன்று முதல் பத்திரப்பதிவு செய்ய ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நடத்தவிருந்த போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.

இந்நிலையில், திருச்செந்துறை சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊர்மக்களை சந்தித்து கிராமத்தின் இடங்கள் தொடர்பான வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பா.ஜ.க வின் மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள், கட்சி அணிபிரிவு நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா , திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தம் என வாரியத் தலைவர் அறிவித்திருப்பது சட்ட விரோதம். திருச்செந்துறை, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்துக்களின் பெயரில் உள்ள சொத்துக்களை வக்ஃபு வாரியம் அபகரிக்கப் பார்க்கிறது.

இத்தகைய மோசடியில் ஈடுபடும் வக்ஃபு வாரிய முதன்மை நிர்வாக அதிகாரியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர்களும் பாதிப்படைகிறார்கள். தமிழகத்தில் பேய்களின் ஆட்சி நடக்கிறது. இது ஒரு இந்து விரோத அரசு ஸ்டாலின் ஆட்சி மாலிக் கபூரின் ஆட்சியாக உள்ளது.

இந்து மதக் கோவில்களையும், சொத்துக்களையும் அரசுடமையாக்கி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழக அரசு வைத்துள்ளது. ஒரு மதச்சார்பற்ற அரசு இஸ்லாமிய, கிறிஸ்துவ மதச் சொத்துக்களையும் கையகப்படுத்தி இந்து என்ற வார்த்தையை தவிர்த்து பொதுவான பெயரில் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" என ஹெச் ராஜா வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்... மத்திய அரசு அனுமதி

Last Updated : Sep 16, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.