ETV Bharat / state

நடிகர் நாஞ்சில் விஜயன் திடீர் கைது! - vijay tv comedian nanjil vijayan arrested

யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் நடிகர் நாஞ்சில் விஜயனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஜய் டிவி நடிகர் நாஞ்சில் விஜயன் கைது
விஜய் டிவி நடிகர் நாஞ்சில் விஜயன் கைது
author img

By

Published : Dec 17, 2022, 4:37 PM IST

திருச்சி: பிரபல யூடியூபரான சூர்யா தேவி, விஜய் தொலைக்காட்சி புகழ் நடிகருமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து யூடியூப் மூலமாக சூர்யா தேவி அவதூறாகப் பதிவிட்டதால், வனிதாவிற்கும் சூர்யா தேவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வனிதா அளித்த புகாரில் யூடியூபர் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு ஆதரவாகவும், சூர்யா தேவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் அவரது யூடியூப் சேனலில் பேசி பதிவிட்டார்.

இதனைப் பற்றி கேட்பதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வளசரவாக்கம் வீரப்ப நகரில் உள்ள நாஞ்சில் விஜயனின் அலுவலகத்திற்குச் சென்ற சூர்யா தேவி மற்றும் அவரது நண்பர் அப்புவை நாஞ்சில் விஜயன் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சூர்யா தேவி தன்னை தாக்கிய நடிகர் நாஞ்சில் விஜயன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை தாக்கியதாக யூடியூபர் சூர்யா தேவி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் யூடியூபர் சூர்யா தேவி மற்றும் அவரது நண்பர் அப்புவை கட்டையால் தாக்கியதும், பின்னர் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க நாஞ்சில் விஜயன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் மீது கொலை மிரட்டல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று(டிச.17) நாஞ்சில் விஜயனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் நாஞ்சில் விஜயனிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ’இனி வாரிசும் நாங்க தான், துணிவும் நாங்க தான்: ரெட் ஜெயண்ட் அதிரடி முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.