ETV Bharat / state

5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!! - திருச்சி மாவட்ட செய்தி

Bill collector caught by vigilance officials: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 6:52 PM IST

திருச்சி: தீரன் நகரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது.

அந்த காலி மனையில் வீடு கட்ட எண்ணிய நாகராஜன் கடந்த 14.8.2023 அன்று தனது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டுவதற்காக திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சியின் 48வது வார்டு வரி வசூல் மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த பில் கலெக்டர் ராஜலிங்கம் (வயது 54) என்பவரை சந்தித்து வரி செலுத்த விவரம் கேட்டுள்ளார். பில் கலெக்டர் ராஜலிங்கம் நாகராஜனிடம் காலி மனை வரி விதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்து ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீண்டும் வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார்.

அதன் பேரில் நாகராஜன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கடந்த 23.8.2023 அன்று சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரி வசூல் மையத்திற்கு சென்று பில் கலெக்டர் ராஜலிங்கத்தை சந்தித்து காலி மனை வரி விதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்துள்ளார்.

விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட பில் கலெக்டர் ராஜலிங்கம் நாகராஜனின் காலி மனைக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்து கொடுக்க தனக்கு 7000 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பின்னர் நாகராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் பில் கலெக்டர் ராஜலிங்கம் 2000 ரூபாய் குறைத்துக் கொண்டு 5000 கொடுத்தால் மட்டுமே உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து கொடுக்க முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியதன் பேரில் நாகராஜனிடம் 5000 ரூபாய் லஞ்ச பணத்தை இன்று 25.8.2023 மதியம் சுமார் 12 மணியளவில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் வைத்து பில் கலெக்டர் ராஜலிங்கத்திடம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை ராஜலிங்கம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பில் கலெக்டர் ராஜலிங்கத்தின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் இருந்த கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "திருச்சி எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக உள்ளோம்; வதந்திகளை நம்பாதீர்" - அமைச்சர் கே.என்.நேரு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.