ETV Bharat / state

காய்கறி வியாபாரிகள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் அறிவுறுத்தல்

author img

By

Published : Mar 31, 2020, 8:22 PM IST

திருச்சி: கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள காய்கறி வியாபாரிகள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

காய்கறி வியாபாரிகள் சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை மஞ்சம்பட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த நான்கு நாள்களாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்லும்படி மாவட்ட அலுவலர்கள் கடைகளுக்கு முன் சதுரங்கள் வரைந்துள்ளனர்.

காய்கறி வியாபாரிகள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தல்

அதனை ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு கள நிலவரத்தை பொதுமக்கள், வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் காய்கறி வியாபாரிகளும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கரோனா நிவாரண டோக்கன் பெற முண்டியடித்து வந்த மக்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.