ETV Bharat / state

கருணாநிதியை நினைத்து கண்கலங்கிய உதயநிதி! - 2019 மக்களவைத் தேர்தல்

திருச்சி: காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்த தமிழ்நாடு அரசை வீழ்த்த வேண்டும் என அவர் பேசும்போது கண்கலங்கினார்.

udhayanidhi campaigan
author img

By

Published : Apr 11, 2019, 9:29 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் நேற்றிரவு (ஏப்.10) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், நமது தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, ஸ்டாலின் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குமாறு அவரது கையை பிடித்து கெஞ்சினார்.

ஆனால், முதலமைச்சர் உடனடியாக சம்மதம் தெரிவிக்காமல் பார்க்கலாம் என்று சொன்னார். சிறிது நேரத்தில் இடம் மறுக்கப்பட்டது என்று செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விடிய விடிய விசாரணை நடந்து, இறுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்தது. மரணத்தின் தருவாயிலும் அவர் போராடி வெற்றி பெற்றார். இப்படி ஒரு இரக்கமற்ற அரசு தமிழ்நாட்டில் உள்ளது.

இதற்காக நாம் அவர்களை பழிவாங்க வேண்டும். அதற்கான நாள்தான் ஏப்ரல் 18. அன்றைய தினம் நடக்கும் வாக்குப்பதிவில் திமுகவுக்கும், கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளது. இருவரும் கூட்டுக் களவாணிகள். அதனால் மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் அவர்களை வீழ்த்த வேண்டும் என்றார்.

கருணாநிதி சமாதி விவகாரம் குறித்து பேசியபோது, உதயநிதி கண்கலங்கினார். அவர் கண் கலங்கியதைக் கண்டு அங்கு கூடியிருந்த திமுக மகளிர் அணியினரும் கண் கலங்கினர்.

கருணாநிதியை நினைத்து கண்கலங்கிய உதயநிதி

Intro:திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Body:திருச்சி: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்த தமிழக அரசை குறிப்பிட்டுப் பேசும் போது உதயநிதி கண் கலங்கினார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டு பேசுகையில் கண் கலங்கினார். அவர் பேசுகையில், நமது தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டாலின் குடும்பத்தாரையும் அழைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குமாறு அவரது கையை பிடித்து கெஞ்சினார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக சம்மதம் தெரிவிக்காமல் பார்க்கலாம் என்று சொன்னார். சிறிது நேரத்தில் இடம் மறுக்கப்பட்டது என்று செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விடிய விடிய விசாரணை நடந்தது. இறுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்தது. மரணத்தின் தருவாயிலும் அவர் போராடி வெற்றி பெற்றார்.
இப்படி ஒரு இரக்கமற்ற அரசு தமிழகத்தில் உள்ளது. இதற்காக நாம் அவர்களை பழிவாங்க வேண்டும். அதற்கான நாள் தான் ஏப்ரல் 18. அன்றைய தினம் நடக்கும் வாக்குப்பதிவில் திமுகவுக்கும், கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளது. இருவரும் கூட்டு களவாணிகள். அதனால் நாடாளுமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் அவர்களை வீழ்த்த வேண்டும் என்றார்.
கருணாநிதி சமாதி விவகாரம் குறித்து பேசியபோது உதயநிதி கண்கலங்கினார். தனது தோளில் கிடந்த துண்டு மூலம் கண்களை அவ்வப்போது துடைத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் பிரசார வேனில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வேறு ஒரு துண்டை உதயநிதிக்கு வழங்கினார். அதையும் வாங்கி உதயநிதியை கண்களைத் துடைத்துக் கொண்டார். உதயநிதி கண் கலங்கியதை கண்டு அங்கு கூடியிருந்த திமுக மகளிர் அணியினரும் கண் கலங்கினர்.

Conclusion:கருணாநிதி சமாதி விவகாரம் குறித்துப் பேசியபோது கண் கலங்கிய உதயநிதி தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.