ETV Bharat / state

மலையில் அமர்ந்து காவிரியை கண்காணிக்கும் உச்சி பிள்ளையார்!

author img

By

Published : Aug 27, 2020, 12:36 PM IST

Updated : Aug 27, 2020, 8:29 PM IST

'குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம்' என்பார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலும் முருகன், பெருமாள் ஆகிய இருவர் மட்டுமே மலை தெய்வங்களாக இருப்பர். ஆனால், தமிழ்நாட்டின் இதயமாக உள்ள திருச்சியின் மலைக்கோட்டையில் மட்டும் தான் விநாயகர் தெய்வமாக குடிகொண்டுள்ளார்.

uchchi-pillaiyar-lord-vinayaka-seated-atop-the-rock-fort-keeps-a-watch-on-river-cauvery

விநாயகர் என்றதும் தமிழ்நாட்டில் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது, திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் தான். காவிரிக்கு அருகில் 273 அடி உயரம் கொண்ட ஒற்றைக் கல் பாறையான மலைக்கோட்டையின் மீது உச்சியில் கம்பீரமாக அமர்ந்துள்ளார், விநாயகர்.

'குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம்' என்பார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலும் முருகன், பெருமாள் ஆகிய இருவர் மட்டுமே மலை தெய்வங்களாக இருப்பர். ஆனால், தமிழ்நாட்டின் இதயமாக உள்ள திருச்சியின் மலைக்கோட்டையில் மட்டும் தான் விநாயகர் தெய்வமாக உள்ளார். அதனாலோ என்னவோ பலருக்கும் விநாயகர் என்றதும் 'மலைக்கோட்டை' நினைவுக்கு வருகிறது.

மலையில் அமர்ந்து காவிரியைக் கண்காணிக்கும் உச்சி பிள்ளையார்

மலைக்கோட்டையின் உச்சியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசித்தால் வினைகள் தீர்ந்து வாழ்க்கை விருட்சமாகும். ஆனால், அதற்காக நாம் 437 படிகள் ஏறி மெனக்கெட வேண்டும். வழக்கம்போல், இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு 100 கிலோ எடை கொண்ட கொலுக்கட்டை வைத்து பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

புராணங்களும், வரலாறும் அந்த ஒற்றைக் கல் மலை மீது அமர்ந்துள்ள விநாயகருடன் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. மலைக்கோட்டையின் வரலாற்றில் பல வம்சங்கள், பல மன்னர்கள் தங்களின் முத்திரைகளை விட்டுச் சென்றுள்ளனர். சிலர் கோயிலைக் கட்டியுள்ளனர். சிலர் அந்தக் கோயிலை விரிவாக்கம் செய்துள்ளனர். பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் கோயிலின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது என்றாலும் கூட, மலைக்கோட்டையின் வரலாறும் தமிழ்நாட்டின் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது.

மலைக்கோட்டையின் மூன்று நிலைகளிலும் கோயில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சி பிள்ளையார் கோயில், இடையே தாயுமானவர் கோயில் அங்கம் வகிக்கிறது. இதைத் தவிர்த்து பல்லவர் கால குடைவரைக் கோயிலும், பாண்டியர் கால குடைவரைக் கோயிலும், சமணர்களை இணைக்கும் கல்வெட்டுகளும் உள்ளன.

இந்த வரலாறு பற்றி தாயுமானசுவாமி கோயில் ஓதுவார் பாலசுப்ரமணியன் பேசுகையில், ''மூன்று தலைகளைக் கொண்டு திரிசிரம் என்ற அசுரன், மலையைக் கையால் தேய்த்து வழிபாடு செய்தும், சாமி காட்சி கொடுக்கவில்லை. இதனால், அசுரன் ஒவ்வொரு தலையாக வெட்டி தீயில் போட்டான். மூன்றாவது தலையைத் தீயில் போடும்போது சாமி அசுரனுக்குக் காட்சி கொடுத்தார். தாயுமானசுவாமி என்று பெயர் கொண்ட சிவபெருமான் இங்கே எழுந்தருளினார்'' என்றார்.

இதேபோல் ஒரு முறை ஆதிசேசனுக்கும், வாயு தேவனுக்கும் கைலாயத்தில் போட்டி நடந்தபோது, வாயு பகவான் பலமாக காற்றை வீசியுள்ளார். அப்போது ஆதிசேசன் கைலாய மலையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேசன் ஒரு தலையை மட்டும் தூக்கியபோது 3 பாறைகள் சிதறி, மூன்று இடங்களில் விழுந்தது. அதில் ஒன்று ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி, மற்றொன்று திருச்சிராப்பள்ளி மலை, மூன்றாவது இலங்கையில் உள்ள திருகோணமலை ஆகும்.

தொடர்ந்து மற்றொரு வரலாறும் மலைக்கோட்டைக்கு கூறப்படுகிறது. ராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பிய ராமருக்கு நடந்த பட்டாபிஷேகத்தில் விபீஷ்ணனும் கலந்து கொண்டார். அப்போது விபீஷ்ணருக்கு ராமர், ரங்கநாதர் சிலை ஒன்றைப் பரிசளித்துள்ளார். அதனோடு, சிலையை தரையில் வைக்காமல் இலங்கைக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சிலையை விபீஷ்ணர் எடுத்துக் கொண்டு திருச்சி வரும்போது காவிரி ஆற்றில் குளித்து பூஜை செய்ய நினைத்துள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவனிடம் விபீஷ்ணர் ரங்கநாதர் சிலையைக் கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றார். ஆனால், சிறுவன் வடிவில் வந்த விநாயகரோ, சிலையை கீழே வைத்துவிட்டார். குளித்துவிட்டு வந்த விபீஷ்ணரால், அந்த சிலையை அசைக்க கூட முடியவில்லை. அங்கிருந்து மலையின் உச்சிக்கு ஓடிய சிறுவனை கோபத்தில் மூன்று முறை தலையில் கொட்டினார். அப்போது சிறுவன் விநாயகராக மாறி, காட்சியளித்தார்.

அந்த ரங்கநாதர் சிலை வைக்கப்பட்ட இடம் தான் ஸ்ரீரங்கமாக மாறியுள்ளது. இப்போதும் இலங்கையைப் பார்த்தவாறு ரங்கநாதர் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இதே மலைக்கோட்டைக்கும் அனுமனுக்கும் சில தொடர்புகளும் உண்டு. அனுமன் முன்பாக, ஆதிசேசன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அனுமனோ தாயுமானசுவாமி முத்திரையாக இருக்க வேண்டும் என வேண்டினார். இதன் காரணமாக தற்போது வரை இக்கோயிலின் முத்திரையாக சிவபெருமானை ஆஞ்சநேயர் வணங்குவது போன்ற முத்திரை உள்ளது.

புராண வரலாறு மட்டுமின்றி, சில சரித்திர கதைகளையும் தன்னகத்தே மலைக்கோட்டை வைத்துள்ளது. பில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையான பாறையாக இருந்த மலையைச் சுற்றி கோட்டை உள்ளதால், 'மலைக்கோட்டை' எனப்பெயர் பெற்றது. இன்று வரையிலும் திருச்சியின் அடையாளமாகவும் மலைக்கோட்டை விளங்கி வருகிறது.

இந்த மலைக்கோட்டை, வரலாற்றில் நடந்த சில போர்களின் நினைவுகளை சுமந்து வந்துள்ளது என வரலாற்று ஆர்வலரான விஜயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை நாயக்க மன்னர்கள், பீஜப்பூர் மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் போர்கள் எனப் போர் நினைவுகளை வைத்துள்ளது என வரலாற்று ஆர்வலரான விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திராவிட கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மலைக்கோட்டை, விஜயநகர மன்னர்களின் எல்லையாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்களின் கைகளுக்குச் சென்று, காலனித்துவ ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்தது. பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட பாறைகளும் இங்கு உள்ளது. கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் துறவிகள் பற்றிய கல்வெட்டுகளும் இவ்விடத்தில் உள்ளன. பல்லவர்கள் அதனை பாண்டியர்களிடம் இழந்தனர். 10ஆம் நூற்றாண்டின்போது, அது சோழர்கள் கைகளுக்குச் சென்றது.

பின்னர் மாலிக் கபூரின் படையெடுப்புக்குப் பின், டெல்லி திப்பு சுல்தான் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. தொடர்ந்து விஜயநகர பேரரசு ஆட்டம் கண்ட பின் மதுரை நாயக்கர்களின் கீழ் வந்தது. எத்தனை புராணங்கள், வரலாறுகள் இருந்தாலும் காவிரிக்கு அருகில் உச்சி பிள்ளையார் கோயில் இன்றும் திருச்சியின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது.

இதையும் படிங்க: வினை தீர்ப்பான் விநாயகன்' - உலகப் புகழ்பெற்ற சாசிவே காலு விநாயகர் குறித்த தொகுப்பு...!

Last Updated : Aug 27, 2020, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.