ETV Bharat / state

மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவர் கைது! - விற்பனையாளர்கள் கைது’

திருச்சி: மணப்பாறை அருகே மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Two sellers arrested for stealing money from liquor store

author img

By

Published : Aug 16, 2020, 2:34 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேட்டுக்கடையில் அரசு மதுபானக் கடை இயங்கிவருகிறது. இதில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் என ஒரு நாளைக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். கடைக்கு இரவு நேர காவலாளியாக அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.14) இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற காவலாளி சுப்ரமணி, இரவு கடைக்குச் சென்று பார்த்தபோது, கடையின் வெளிக்கதவு பூட்டியும், உள் கதவு பூட்டாமலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து மேற்பார்வையாளர் தங்கவேலுவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் கடையின் விற்பனையாளர்களுடன் கடைக்குச் சென்று பார்த்தபோது, மதுபானக் கடையிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடையில் விற்பனையாளர்கள் மணிவாசகம், மாரியப்பனிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து, மணிவாசகத்தின் வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், அவரது வீட்டிலிருந்து 5 லட்சத்து 39 ஆயிரத்து 440 ரூபாயை கைப்பற்றினர்.

மதுபானக் கடையில் திருடியதற்காக மணிவாசகம், மாரியப்பன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா வார்டில் மது அருந்திய நோயாளி - 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.