ETV Bharat / state

தொலைக்காட்சி நிருபரைத் தாக்கிய இருவருக்கு காவல் துறை வலைவீச்சு! - டிவி நிருபரை அடித்து மண்டையை உடைத்த இருவர்

திருச்சி: மோசடி எம்எல்எம் நிறுவனம் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்ட டிவி நிருபரை அடித்து மண்டையை உடைத்த, இருவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

two-person-attacked-by-reporter-police-investigate

author img

By

Published : Feb 19, 2020, 1:41 PM IST

திருச்சி - உறையூர் ராமலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திருச்சி நிருபராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் எம்.எல்.எம் நிறுவனம் நடத்திய கூட்டத்தை தஞ்சை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. இதேபோல் இந்த தனியார் டிவி நிருபர் சபரிநாதன் இந்த நிறுவனத்தின் மோசடி குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், திருச்சி மெயின்கார்டுகேட் அருணாசலம் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் செய்தி சேகரித்து விட்டு சபரிநாதன் மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருச்சி - தில்லை நகர், 4ஆவது குறுக்குத்தெரு, அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த சபரிநாதனை பின்னால் மற்றொரு அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கையில் வைத்திருந்த கட்டையால், அவரின் தலையில் பலமாக அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தில்லைநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கெனவே மோசடி நிறுவனம் குறித்து செய்தி வெளியிட்ட போதே, அந்நிறுவனத்தின் மூலம் சபரிநாதனுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக சபரிநாதன் தாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொலைக்காட்சி நிருபரைத் தாக்கிய இருவருக்கு காவல் துறை வலைவீச்சு

செய்தி வெளியிட்டதற்காக நிருபர் ஒருவரை திருச்சியில் அடித்து மண்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேமுதிக நிர்வாகியின் இருசக்கர வாகனம் தீயிட்டு எரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.