திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரை மட்ட கிணற்றில் இருந்து 55 நீர் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சர்க்கார் பாளையம் அருகே 900 MM விட்டம் உள்ள குழாயில் உடைப்பு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. இதனை சரி செய்ய 22.3.2023 (புதன்கிழமை) நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆகவே, மாநகராட்சி மண்டலம் 2-க்கு உட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜ் நகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது பகுதிகள். மண்டலம் 3-க்கு உட்பட்ட அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்பநகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலணி பழையது, M.K. கோட்டை செக்ஸன் ஆபிஸ், மேல கல்கண்டார் கோட்டை, நாகம்மை வீதி, M.K. கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர் பகுதிகள்.
மண்டலம் 4-க்கு உட்பட்ட விமான நிலையம், ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர் , LIC காலணி புதியது, LIC சுப்பிரமணிய நகர், தென்றல் நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் EB காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், மதுரை ரோடு பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, ரெங்காநகர் பகுதிகள் அடங்கிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 23.03.2023 அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது.
மறுநாள் (வெள்ளி கிழமை) 24.03.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . ஆகவே, பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து திருச்சி மாநகராட்சி உடன் ஒத்துழைக்க வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "விவசாயிகள் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் குழுக்கள்" - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!