திருச்சி மரக்கடை பகுதியிலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், “2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்க வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏழு ஆண்டுகளாக பணி வழங்காமல் இருப்பவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, தகவலறிந்து வந்த காந்தி மார்க்கெட் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர்.