ETV Bharat / state

மாணவர்கள் நினைத்தால் தான் இந்தியா வல்லரசாக மாறமுடியும் - ஹிப் பாப் தமிழா ஆதி - கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

திருச்சி: மாணவர்கள் நினைத்தால் தான் இந்தியா வல்லரசாக மாறமுடியும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் பாப் ஆதி கூறியுள்ளார்.

aadhi
aadhi
author img

By

Published : Jan 10, 2020, 9:17 AM IST

திருச்சி தனியார் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் பாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதில் மாணவ, மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து வந்து அசத்தினர். இந்த நிகழ்வில் தேவராட்டம் ஆடியபடி, உழவுத் தொழிலுக்கான விலங்குகள் காட்சிபடுத்தப்பட்டு தமிழரின் வாழ்வியல், பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாச்சார பேரணி நடைபெற்றது

மேலும், இயற்கை விஞ்ஞானி திருப்பதி தங்கசாமி, மண்பாண்ட கலைஞர் ராமு, தேவராட்ட கலைஞர் ரவிக்குமார் ஆகியோருக்கு தமிழர் பண்பாட்டு விருதுகள் 2020 வழங்கப்பட்டது.

பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஆதி

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டு பற்றிய பாடல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ் எழுத்துக்கள் உருவானது குறித்து ஆராய்ச்சி செய்து 'தமிழி' என்ற 8 எபிசோடுகளை கொண்ட படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இருக்கும். மாணவர்கள் நினைத்தால் தான் இந்தியா வல்லரசாக மாறமுடியும்.

இன்டர்நெட் தொழில்நுட்பம் உங்களுக்கு மிகப்பெரிய வரம். அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் உங்களது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொள்ளும் இடத்திற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

தொடர்ந்து தேடுதல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் மேலே உயர்ந்து கொண்டே இருக்கலாம். மாணவ சமுதாயத்தில் கல்வியை உரிய காலத்தில் கற்க வேண்டும். மாணவர்களின் சக்திக்கு முன்னால் மற்ற எல்லா சக்தியும் கீழேதான் என்றார்.

Intro:திருச்சி கல்லூரி மாணவ மாணவிகள் நடிகர் ஆதியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.Body:திருச்சி;
திருச்சி கல்லூரி மாணவ மாணவிகள் நடிகர் ஆதியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
திருச்சி புனித வளனார் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் பாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் இயற்கை விஞ்ஞானி திருப்பதி தங்கசாமி, மண்பான்ட கலைஞர் ராமு, தேவராட்ட கலைஞர் ரவிக்குமார் ஆகியோருக்கு தமிழர் பண்பாட்டு விருதுகள் - 2020 வழங்கப்பட்டது.
இதில் மாணவ, மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்தும், தேவராட்டம் ஆடியபடி, உழவுத் தொழிலுக்கான விலங்குகள் காட்சிபடுத்தப்பட்டு தமிழரின் வாழ்வியல், பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாச்சார பேரணி நடைபெற்றது. தொடர்ந்து நடிகர் ஆதி பேசுகையில்
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டு பற்றிய பாடல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று இப்பாடல் பிரபலமாகி போராட்டமும் வெற்றி பெற்றது. தமிழ் எழுத்துக்கள் உருவானது குறித்து ஆராய்ச்சி செய்து 'தமிழி' என்ற 8 எபிசோடுகளை கொண்ட படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இருக்கும். மாணவர்கள் நினைத்தால் தான் இந்தியா வல்லரசாக மாறமுடியும். இன்டர்நெட் தொழில்நுட்பம் உங்களுக்கு மிகப்பெரிய வரம். அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் உங்களது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொள்ளும் இடத்திற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. தொடர்ந்து தேடுதல் மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் மேலே உயர்ந்து கொண்டே இருக்கலாம். மாணவ சமுதாயத்தில் கல்வியை உரிய காலத்தில் கற்க வேண்டும். மாணவர்களின் பவருக்கு முன்னால் மற்ற எந்த சக்தியும் கீழே தான். அதிக பலமும் வாய்ந்தது என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு பாடல்களையும் அவர் பாடி மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.