ETV Bharat / state

திருச்சியை 2ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்: தமுமுக கோரிக்கை - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று தமுமுக மாவட்ட தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்

author img

By

Published : Aug 25, 2020, 8:25 PM IST

திருச்சி மாவட்டம் பாலக்கரை அருகேயுள்ள பிரபாத் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அதன் மாவட்ட தலைவர் உதுமான் அலி கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவு பொட்டலங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளாக மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்துள்ளோம். இதேபோன்று அனைத்து விதமான இயற்கை சீற்றங்களிலும் அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்துள்ளோம். தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும். திருச்சி காந்தி மார்க்கெட் பிரச்னை தற்போது எழுந்துள்ளது.

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க கோரிக்கை

மக்களுக்கு எந்த இடம் சௌகரியமாக இருக்குமோ அந்த இடத்தில் மார்க்கெட்டை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து மாவட்ட நிர்வாகம் அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 2ஆவது தலைநகர் மதுரை: எம்ஜிஆரின் கனவை நனவாக்க விரும்பும் செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.