ETV Bharat / state

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 1.41 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம் பக்தர்கள் காணிக்கை - During last 12 days at Samayapuram Mariamman Temple devotees donated Rs. 1.41 crore in cash, 2 kg of gold and 5 kg of silver to temple

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 12 நாட்களில் ரூ. 1.41 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

During last 12 days at Samayapuram Mariamman Temple devotees donated Rs. 1.41 crore in cash, 2 kg of gold and 5 kg of silver to temple

author img

By

Published : May 10, 2022, 8:04 AM IST

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் வந்து து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கோயிலின் மண்டபத்தில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று (மே.9) காலை முதல் எண்ணினர்.

அப்போது கடந்த 12 நாட்களில் பக்தர்கள் கோயில் உள்ள 22 உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. ஒரு கோடியே, 41 லட்சத்து, 52 ஆயிரத்து, 635 ரொக்கமும்,2 கிலோ 879 கிராம் தங்கமும், 5 கிலோ 197 கிராம் வெள்ளியும், 112 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைத்ததாக கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராபர்ட் கிளைவுக்கு பாடம் புகட்டிய அம்மன் - சமயபுரம் மாரியம்மன் வரலாற்றில் ஒன்று!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.