திருச்சி: திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் கேடி ஜங்ஷன் அருகே பிரபல பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மதன். இக்கடையில் மார்ட்டின் என்பவர் பணியாற்றினார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மதன் சென்னைக்கு சென்று 1.5 கிலோ நகைகளை வாங்கிவிட்டு திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார். ஆனால், மார்ட்டின் திரும்ப வரவில்லை. இதுகுறித்து, மதன் உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
மேற்கொண்ட விசாரணையில், கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மார்ட்டினை கடத்தி மண்ணச்சநல்லூர் அருகே கொலை செய்து புதைத்து விட்டு நகையுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மார்ட்டின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை காவல் துறையினர் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரைச் சிறுவனுக்கு சைக்கிள் பரிசளித்த முதலமைச்சர்!