ETV Bharat / state

திருச்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு..4 மணி நேரத்தில் கும்பலை கைது செய்த போலீஸ்! - திருச்சி நகை பட்டறையில் நகை திருட்டு

திருச்சி நகை பட்டறையில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நகைகளையும் பறிமுதல் செய்த போலீசாருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பாராட்டு தெரிவித்தார்.

Trichy Police Commissioner praised the police for arresting the thieves within 4 hours in R 50 lakh worth jewellery theft case
திருச்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு; 4 மணி நேரத்தில் திருடர்களை கைது செய்த போலீசுக்கு பாராட்டு
author img

By

Published : Apr 27, 2023, 10:48 AM IST

திருச்சி: சந்துக்கடை பகுதியில் சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் (43). இவர் கடந்த 15 வருடங்களாக தனது வீட்டிலேயே நகைப் பட்டறை வைத்து, ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோசப் கடந்த ஒரு மாதமாக சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் நகை வேலையை முடித்துவிட்டு, வேதாத்திரி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

வழக்கம் போல ஏப்ரல் 25-ஆம் தேதி, அவரும் அவரது மனைவி ஏஞ்சல் மேரியும் நகை வேலை முடித்து விட்டு இரவு சுமார் 10 மணியளவில் வேதாத்திரி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில், ஜீவா என்பவர் ஜோசப்க்கு போன் செய்து அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், ஜோசப் அவரது மனைவியுடன் சௌந்தர பாண்டியன் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாகவும், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ஆர்டரின் பேரில் மூக்கத்தி செய்வதற்காக தங்கத்தை கம்பியாக உருக்கி வைத்திருந்த தங்கம், கல் வைத்த மூக்குத்திகள், பூ மூக்குத்திகள், கல் வைக்காத மூக்குத்திகள், மூக்குத்திகளின் திருகாணிகள், நகை செய்யும் போது சேதாரமாகும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தோடு ஆகிய நகைகள் திருடப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

திருடுபோன நகைகளின் மொத்த எடை சுமார் 1 கிலோ இருக்கும் என்றும், அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்றும் தனது புகாரின் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை 08.30 மணிக்கு கோட்டை (குற்றபிரிவு) காவல் நிலையத்தில் வழக்குப்ப்திவு செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு திருடியவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து விசாரணை செய்ததில், சரித்திர பதிவேடு (Suspect History Sheet) உள்ள, ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரணி குமார் (22), பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சரவணன் (22) ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதில் பரணி குமார் மீது திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது.

சரவணன் மீது திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பாலக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. இதனையடுத்து இருவரையும் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இருவரையும் தனிப்படையினர் பல இடங்களில் தேடியும், ரகசிய விசாரணை மேற்கொண்டதில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் இருwத இருவரையும் 12.30 மணிக்கு கைது செய்து, கருவாட்டுப்பேட்டையில் உள்ள பரணிகுமாரின் வீட்டில் இருந்த நகைகளையும் கைப்பற்றினர்.

நகைப்பட்டறையில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தை துரிதமாக விசாரணை செய்து 4 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து திருடு போன நகைகளையும் பறிமுதல் செய்த ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் நிவேதாலெட்சுமி, கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Kachchatheevu: கச்சத்தீவில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.