ETV Bharat / state

விபத்தில் காயமடைந்த முதியவருக்கு முதலுதவி செய்த காவலர் - காணொலி வைரல்!

திருச்சி: விபத்தில் மயக்கமடைந்த முதியவருக்கு காவலர் ஒருவர் முதலுதவி அளித்த டிக்டாக் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Trichy police tik tok viral
Trichy police tik tok viral
author img

By

Published : Dec 11, 2019, 4:13 PM IST

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் வண்ணாங்கோயில் என்ற பகுதி அருகே சில நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனைவி, பேரனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மயங்கிவிழுந்தார்.

முதியவரின் உடல் அசைவற்று கிடந்ததால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பிரபு விபத்து ஏற்பட்ட இடத்துக்கு வந்தார். முதியவரின் நாடியைப் பிடித்துப் பார்த்ததில், அவருக்கு உயிர் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முதியவரின் மார்பில் கையை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்ததில், முதியவர் கண்விழித்து எழுந்தார். உடனடியாக அவரை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயமடைந்த முதியவருக்கு காவலர் உதவும் இந்தக் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

விபத்தில் காயமடைந்த முதியவருக்கு உதவும் காவலர்

முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த காவலரைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: இரண்டாவது மனைவி மீது கொள்ளை பிரியம்: முதல் மனைவியை கொன்ற ஆசிரியர்

Intro:விபத்தில் மயக்கமடைந்த முதியவருக்கு காவலர் ஒருவர் முதலுதவி அளித்த டிக் டாக் வீடியோ வைரலாகி வருகிறது.Body:திருச்சி:
விபத்தில் மயக்கமடைந்த முதியவருக்கு காவலர் ஒருவர் முதலுதவி அளித்த டிக் டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் வண்ணாங்கோயில் என்ற பகுதி அருகே சில தினங்களுக்கு முன்பு டூவீலர் மீது ஜீப் மோதியது. இதில் டூவீலரில் மனைவி மற்றும் பேரனுடன் வந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்தார். விபத்து நடந்தவுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடினர். அப்போது முதியவரின் உடல் அசைவற்று கிடந்ததால் அவர் இறந்துவிட்டதாக கருதி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது அந்த வழியாக ராம்ஜி நகர் காவல் நிலையம் காவலர் பிரபு ரோந்து வந்தார். முதியவரின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். அவருக்கு உயிர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரின் மார்பில் கையை வைத்து அமுக்கி வாய் மூலமாக சுவாசக் காற்றை அளித்தார். இரண்டு முறை இவ்வாறு செய்யதவுடன் முதியவர் கண் விழித்து எழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்சி டிக்டாக் செயலி வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்து. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிக்டாக் செயலி மூலம் பலவிதமான விபரீத செயல்களில் ஈடுபடுவோர் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் முதியவர் ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை காவலர் ஒருவர் காப்பாற்றிய இந்த டிக் டாக் வீடியோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். காவலர்கள் இது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார்களா? என்று பலரையும் ஆச்சரியப்படும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.