ETV Bharat / state

திருச்சியில் திகிலூட்டும் மர்ம பங்களா!

author img

By

Published : Jun 15, 2022, 4:01 PM IST

Updated : Jun 15, 2022, 4:17 PM IST

'ஏரியாவாசிகள் சார் மொதல்ல கேமராவை உள்ளே வையுங்க சார். கண்ணனுக்கு வர்மக்கலை தெரியும் சார். நீங்க பேசாம ஏதாவது கேட்டு, நாங்க பேசாம ஏதாவது சொல்லி, நடக்கக்கூடாதது நடந்துடப்போகுது, மொதல்ல அரசாங்கத்துகிட்ட சொல்லி அந்த பேய் பங்களாவை இடிக்க வழிபாருங்க சார்' என்றார்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் சும்மாவா சொன்னார் புத்தர்.

அன்று.... மலைக்க வைத்த பங்களாஇன்று... மர்ம பங்களா !

திருச்சி: 2013ஆம் ஆண்டின் இறுதியில் அமளிதுமளிபட்டது திருச்சி திருவானைக்கோயில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி நகர். காவல் துறை வாகனங்கள் வரிசை கட்டி வலம்வர சற்றே அதிர்ந்துதான் போனார்கள், அந்த ஏரியாவாசிகள். என்ன ஏது என்று யோசிப்பதற்கு கூட நேரம் இல்லை. ஆளாளுக்கு தோன்றியதை கதைக்க ஆரம்பித்தார்கள். சரி விஷயத்துக்கு வருவோம்...

வைரவியாபாரியான தங்கவேல் ஜமுனா தம்பதிகளுக்கு இரண்டு வாரிசுகள். ஜமுனாவின் தாயார் சீத்தாலெட்சுமி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். குடும்பத்தில் இப்படி ஒரு புயல் வீசும் என்று சிறிதும் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். வைரவியாபாரி என்பதால் தங்கவேல் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வது வாடிக்கை. ஒருமுறை மும்பை சென்று திரும்பி வந்தவர் சோகமாக வீட்டில் அமர்ந்திருக்கவே என்ன ஏது என யமுனா விசாரிக்க தொழிலில் கொஞ்சம் பிரச்னை, பணத்தை வாங்கியவர்களும் திரும்பத்தரவில்லை எனக்கூறி அடுத்த ஊருக்கு கிளம்பிவிட்டார்.

அன்று.... மலைக்க வைத்த பங்களா... இன்று மர்ம பங்களா !

மீண்டும் ஊருக்கு வந்தவர் சாமியார் கண்ணனை யமுனாவிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். மந்திரம், மாந்திரீகம், வர்மக்கலை அறிந்தவர். இவர் நம் வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்தால் நம்மை பிடித்து இருக்கும் பீடைகள் அகலும் எனக்கூறி சாமியார் கண்ணன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் நன்றாக உபசரிக்கவும்; பூஜை அறையை திறந்துவிடவும் எனக்கூறிவிட்டு மீண்டும் வெளியூர் பயணம் மேற்கொண்டுவிட்டார்.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்ட யமுனாவின் கணவர் தங்கவேல்

கண்ணன் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்க யமுனாவிற்கும் கண்ணனுக்கும் கூடாநட்பு ஏற்பட்டிருக்கிறது. இது நடந்தது 2002ஆம் ஆண்டு. அடிக்கடி வெளியூர் போகும் தங்கவேலு. சில நாள்களில் நிரந்தரமாக காணாமல் போனார். அண்டை வீட்டாருடன் அதிகம் பழக்கம் வைத்துக்கொள்ளாததால் தங்கவேலுவைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

தங்கவேலுவை கண்ணன் சமயபுரம் அருகே கொலை செய்து புதைத்த இடம் தெரியவில்லை. ஏனென்றால் அங்கே இப்பொழுது புதிய நெடுச்சாலை வந்துவிட்டது. அப்பா எங்கே எங்கே எனக்கேட்டு நச்சரித்த மகனை விபத்தில் இறந்ததுபோல செட்டப்செய்து கொன்றும் விட்டதாக தகவல்.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

அதன்பின் துரைராஜ் என்கின்ற ஃபைனான்சியர் அவருடைய ஓட்டுநருடன் காரில் வைத்து எரித்துக்கொல்லப்பட, துரைராஜை கொன்றது நேருவின் சகோதரர் ராமஜெயம்தான் என்றும்; அவருடைய தொழில் போட்டியால்தான் ராமஜெயம் இதைச்செய்தார் என்ற குற்றச்சாட்டும் பலமாக எழுந்தது. பின்னர் அந்த கொலை வழக்கின் முடிச்சும் அவிழ்க்கப்பட்டது. இப்படியிருக்க கடைசி கடைசியாக யமுனாவிற்கு தொல்லையாக இருந்தவர் அவருடைய மகள் சத்யா. அவரையும் கொன்றுவிட்டால் நம்மை கேள்வி கேட்க ஆள் இல்லை எனக்கருதி சத்யாவையும் யமுனா போட்டுத்தள்ள, சத்யாவின் மரணம் மூலமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

முதல்கொலை தங்கவேலு, அடுத்து அவருடைய மகன் செல்வகுமார், அதன்பின் தங்கவேலுவிற்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்த துரைராஜ், அவரின் ஓட்டுநர் சக்திவேல், கடைசியாக தங்கவேலு மகள் சத்யா ஆக ஐந்து கொலைகள், சரி சத்யாவின் கொலையை எப்படி கண்டுபிடித்தார்கள்.

கிடைத்த துப்பு: காவல் துறையினர் ஒரே ஒரு ஆயில் டிரம். அதில்தான் சத்யாவின் உடல் அடைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆயில் டிரம்மில் இருந்த பேட்ஜ் எண்ணை வைத்து அது திருவானைக்கோவிலில் விற்கப்பட்டது என்பதை அறிந்த காவல் துறை அந்த கடையில் விசாரணை மேற்கொள்ள, அவர்கள் ஆட்டோ டிரைவர் கிருஷ்ணகுமாரை கைகாண்பிக்க, அவர் ஆட்டோ டிரைவர் கண்ணனை கைகாண்பிக்க அனைத்தும் புரிந்தது காவல்துறைக்கு, இத்தனை விஷயத்தின் பின்னணியிலும் கண்ணன் என்ற ஒற்றை நபரைத்தான் குற்றவாளி என்று சொல்லி வழக்குப்பதிந்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை குற்றவாளி கண்ணன்
கொலை குற்றவாளி கண்ணன்

இந்தக் கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டார்கள். யமுனா, கண்ணன், யமுனாவின் தாய் சீத்தாலெட்சுமி. சீத்தாலெட்சுமி சிறையிலேயே வயது முதிர்வின் காரணமாக காலமாகிவிட எஞ்சிய யமுனா மற்றும் கண்ணன் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் வழக்கு முடிந்துவிடும். எல்லாம் சரி, என்னதான் சொல்கிறார்கள் ஏரியாவாசிகள். ’சார் மொதல்ல கேமராவை உள்ளே வையுங்க சார். கண்ணனுக்கு வர்மக்கலை தெரியும் சார். நீங்க பேசாம ஏதாவது கேட்டு, நாங்க பேசாம ஏதாவது சொல்லி, நடக்கக்கூடாதது நடந்துடப்போகுது. மொதல்ல அரசாங்கத்துகிட்ட சொல்லி அந்த பேய் பங்களாவை இடிக்க வழிபாருங்க சார்’ என்றார்கள்.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் சும்மாவா சொன்னார் புத்தர்!

இதையும் படிங்க: 550 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு: கடத்தல் லாரி மீட்பு

Last Updated : Jun 15, 2022, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.