ETV Bharat / state

தண்ணீரை மழை மூலமே எதிர்பார்க்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

திருச்சி: தண்ணீரை மழை மூலம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும், இதற்கு தேவையான மரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

isha sathguru
author img

By

Published : Sep 13, 2019, 6:32 PM IST

Updated : Sep 14, 2019, 12:47 AM IST

காவிரி ஆற்றை பாதுகாக்கும் வகையில் "காவேரி கூக்குரல்" என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்த ஜூலை முதல் நடத்திவருகிறார். அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடவேண்டும். இதற்காக ஒரு மரக்கன்றுக்கு ரூ. 42 செலவாகிறது. இந்த தொகையை கொடுத்து, விவசாயிகள் அதன் மூலம் மரம் வளர்க்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். இதையொட்டி அவரே மோட்டார் சைக்கிளை ஓட்டி தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்தி வருகிறார். இந்த மோட்டார் சைக்கிள், கார்கள் அடங்கிய பேரணி நேற்று ஈரோட்டில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று திருச்சிக்கு இந்த பேரணி வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் நேரு, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தண்ணீரை மழை மூலமே எதிர்பார்க்க வேண்டும்

பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில், "100 முதல் 140 நாட்கள்வரை பெய்து வந்த மழை தற்போது 40 முதல் 75 நாட்கள் மட்டுமே பெய்கிறது. இதிலும் 50 விழுக்காடு கடலில் சென்று கலந்துவிடுகிறது என்று அனைவரும் வருத்தப்படுகின்றனர். ஆனால் இவை கட்டாயம் கடலில் கலந்தாக வேண்டும். இல்லை என்றால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடும். தற்போது தமிழ்நாட்டில் கடல் நீர் 60 கி.மீ வரை உள்புகுந்துள்ளது.

காவிரி என்பது ஒரு பிரச்னையாகவே கருதப்படுகிறது. ஆனால் காவிரி என்பது 'காவேரி தாய்' என்பதை நாம் உணர வேண்டும். தற்போது காவிரி நதியில் 44 விழுக்காடு தண்ணீர் குறைந்துவிட்டது என்று அறிவியல் பூர்வமாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே 70 விழுக்காடு காவிரி அழிந்து போய்விட்டது. இது அழிவுக்கான அடையாளமாகும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது காவிரி என்பதே இல்லாமல் போய்விடும். தண்ணீரை மழை மூலம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். இதற்கு தேவையான மரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்" என்றார்.

Intro:திருச்சியில் நடந்த ஈஷா அறக்கட்டளையின் "காவிரி கூக்குரல்" நிகழ்ச்சியில் சத்குரு சிறப்புரையாற்றினார்.

Body:திருச்சி: தண்ணீரை மழை மூலம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும் என்று சத்குரு கூறினார்.
காவிரி ஆற்றை பாதுகாக்கும் வகையில் "காவேரி கூக்குரல்" என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்த ஜூலை முதல் நடத்தி வருகிறார்.
அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடவேண்டும். இதற்காக ஒரு. ரூ 42 செலவாகிறது. இந்த தொகையை கொடுத்து விவசாயிகள் மூலம் மரம் வளர்க்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இதையொட்டி அவரே மோட்டார் சைக்கிளை ஓட்டி தமிழகம் முழுவதும் பேரணி நடத்தி வருகிறார்.
இந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் அடங்கிய பேரணி நேற்று ஈரோட்டில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை திருச்சிக்கு இந்த பேரணி வந்தடைந்தது.
இதையொட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் நேரு, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில்,
100 முதல் 140 நாட்கள் வரை பெய்து வந்த மழை தற்போது 40 முதல் 75 நாட்கள் மட்டுமே பொழிகிறது. இதிலும் 50% கடலில் சென்று கலந்துவிடுகிறது என்று அனைவரும் வருத்தப்படுகின்றனர். ஆனால் இவை கட்டாயம் கடலில் கலந்தாகவேண்டும். இல்லை என்றால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடும். தற்போது தமிழகத்தில் கடல் நீர் 60 கிலோமீட்டர் வரை உள்புகுந்து உள்ளது. தமிழகத்தில் 7,400 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. இதில் எதிர்காலத்தில் 100 முதல் 130 கிலோமீட்டர் வரை கடல்நீர் உள்ளே புகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் தற்போது உள்ள மூன்றில் ஒரு பங்கு மண் அழிந்துவிடும். மழைநீர் கடலில் கலக்காததால் தான் கடல்நீர் ஊருக்கு உள்ளே புகுந்து விடுகிறது. இதற்கு ஆற்றில் தண்ணீர் இருக்க வேண்டும். காவிரி என்பது ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகிறது. ஆனால் காவிரி என்பது "காவேரி தாய்" என்பதை நாம் உணர வேண்டும். தற்போது காவிரி நதியில் 44 சதவீதம் தண்ணீர் குறைந்து விட்டது என்று அறிவியல்பூர்வமாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே 70 சதவீத காவிரி அழிந்து போய்விட்டது. இது அழிவுக்கான அடையாளமாகும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது காவிரி என்பதே இல்லாமல் போய்விடும். தண்ணீரை மழை மூலம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். இதற்கு தேவையான மரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 35 நதிகளில் மட்டுமே ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுகிறது. இந்த வகையில் தமிழகத்தில் பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு ஆறுகளில் மட்டுமே எப்போதும் தண்ணீர் ஓடுகிறது. மற்ற ஆறுகளில் ஆறுமாதங்களுக்கு தான் தண்ணீர் ஓடுகிறது. ஆறுகளில் இருந்து தண்ணீர் பூமிக்குள் செல்ல வேண்டும். அப்போதுதான் நீர் ஆதாரம் பெருகும். தற்போது வெள்ளம் ஏற்படுவதாக கூறப்படும் மாநிலங்களில் அடுத்த ஆறு மாதத்தில் வறட்சி ஏற்படும். இதற்கு பூமிக்குள் தண்ணீர் செல்லாத தான் காரணம் என்றார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நேரு பேசுகையில், தற்போது 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து விட்டது. இந்த தண்ணீர் இருந்தால் ஒரு மாவட்டத்தில் 2 போகம் சாகுபடி செய்ய முடியும். மரம் அளிக்கப்பட்டதும், மணல் அள்ளப்படுவதும் தான் நீர் சேமிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேசுகையில், சத்குரு ஆன்மிகத்தோடு நிற்காமல் மக்களை பாதுகாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடியும். காவிரி மூலம் ஆண்டுக்கு 800 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காகத்தான் இவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலில் கலப்பது என்பது எப்போதாவது தான் நடக்கிறது. நிலத்தடி நீர் பெருக மரம், மணல், ஆறு போன்றவற்றை காப்பாற்றினால் தான் முடியும். அப்போதுதான் மக்களை காப்பாற்ற முடியும் என்றார்.

Conclusion:தற்போது உள்ள நிலை நீடித்தால் இன்னும் 30 ஆண்டுகளில் காவிரி 6 முற்றிலும் அழிந்துவிடும் என்று சத்குரு கூறினார்.
Last Updated : Sep 14, 2019, 12:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.