தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க மாவட்ட தலைவர் சத்யநாராயணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அருணகிரியார் முன்னிலை வகித்தார்.
மாநில பொருளாளர் தியாகராஜன் சிறப்புரை ஆற்றினார். அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு நான்கு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் உள்ள நிலையில் அவர்களுக்கு உடனே பதவி உயர்வு அளிக்க வேண்டும். அரசு பொதுத் தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்து 6, 7, 8ஆம் வகுப்புகளின் மாணவர்கள் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் போராட்டம்