ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஆட்சியர் தலைமையில் நடத்த நீதிமன்றம் உத்தரவு! - AVANIYAPURAM JALLIKATTU CASE

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனைத்து சமூகத்தினரின் ஒன்றிணைத்து குழு அமைத்து கடந்த ஆண்டு போலவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 9:28 AM IST

மதுரை: மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்புடன் இந்த ஜல்லிக்கட்டானது நடத்தப்படும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு கண்ணன் என்பவர் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் எனும் சங்கத்தை பதிவு செய்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை கோரினார். அவரது குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் மட்டுமே அந்த சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும் இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த குழுவில் பங்கேற்பதை தடுத்து வருகிறார். 'அமைதி பேச்சுவார்த்தையில் பட்டியல் சமூகத்தினருடன் சமமாக அமர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த தேவை இல்லை' என தெரிவித்தார். கடந்த ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திறந்தது. பல இடங்களில் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க பட்டியல் சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. பட்டியல் சமூகத்தினரை தவிர்த்து ஜல்லிக்கட்டை நடத்துவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஆகவே அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: யானை வழித்தடங்கள் மீட்பு வழக்கு: எஸ்ஐடி விசாரணைக்கு மாற்றம்.. நீதிமன்றம் அதிரடி!

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக நேற்று (ஜனவரி.10) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "16 பேரைக் கொண்ட அவனியாபுரம் ஆலோசனைக் குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.