ETV Bharat / state

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: 76.9 லட்சம் மக்கள் பயன் - மா.சுப்பிரமணியன் தகவல்! - CM HEALTH INSURANCE SCHEME

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தற்போது வரை ரூ.5,310 கோடி செலவில் 76,94,307 பேர் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 9:26 AM IST

Updated : Jan 11, 2025, 10:32 AM IST

சென்னை: தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், 2025-26ஆம் ஆண்டிற்கான காப்புறுதி கட்டணத்தொகை ரூ.1262.91 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து பணியிலிருக்கும்போது உயிரிழந்த ஆறு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி நிதியையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விருதுகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு, ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணியின் போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிட 2021 அக்.12 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு மருத்துவரும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிதியத்தில் சேர்ந்து பங்களிப்பாக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.6,000 மொத்தமாக செலுத்தினர்.

ஏழை, எளிய மக்களுக்கான திட்டம்:

அதன்படி, மார்ச் 2022ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.500 ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த திட்டத்தில் சுமார் 10,900 மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்து, அதன் அடிப்படையில் சந்தா செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து முதற்கட்டமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பணியின் போது உயிரிழந்த 13 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தமாக ரூ.8.50 கோடி நிதிக்கான காசோலை முதலமைச்சரால் 2023 ஏப்ரல் 13 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் பணியின் போது உயிரிழந்த 7 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தமாக ரூ.7 கோடி நிதிக்கான காசோலைகள் 2024 பிப்.27 அன்று வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை பணியில் இருக்கும்போது தன் இன்னுயிர் இழந்த 20 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.15.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 2022-23ஆம் ஆண்டில் பணியின் போது உயிரிழந்த ஆறு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.6 கோடி இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி பயன்பெற வேண்டுமென்ற உயரிய நோக்குத்துடன் முன்னாள் முதலமைச்சர் 23.07.2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10.01.2022 அன்று மீண்டும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ரூ.1262.91 கோடிக்கான காசோலை:

இத்திட்டத்தில் இதுவரை 1.48 கோடி குடும்பங்கள் பயனாகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரால், இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை மற்றும் அரசு பிரீமியம் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.849/- (கடந்த ஆட்சியில் ரூ.699/-) நிர்ணயிக்கப்பட்டு, 2022 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.7,730 கோடி என்கின்ற வகையில், கடந்த 2022 ஜனவரி 10ஆம் தேதி ரூ.1,248.29 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கினார்கள்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் திமுக போட்டி.. விட்டுகொடுக்கும் காங்கிரஸ்!

அதன் தொடர்ச்சியாக, 2023 ஜனவரி 10ம் தேதி ரூ.1,200 கோடி பிரிமியம் தொகை வழங்கப்பட்டது. பின்னர் 2024 ஜனவரி 10ஆம் தேதி ரூ.1,228.27 கோடி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 11.01.2025 முதல் 10.01.2026 வரை ஆண்டிற்கான பிரீமியமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.849 வீதம் 1,48,57,459 பயனாளி குடும்பங்களுக்கு 95% தொகை ரூ.1198.32 கோடி கடந்த ஆண்டின் மீதமுள்ள 5% பிரீமியம் தொகை ரூ.64.59 கோடி ஆக மொத்தம் ரூ.1,262.91 கோடிக்கான காசோலை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

காப்பீட்டு திட்டத்தில் 76.9 லட்சம் பேர் பயன்:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 23.07.2009 முதல் 08.01.2025 வரை ரூ.13,991 கோடி செலவில் 1,45,81,445 பேர் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தற்போது வரை, ரூ.5,310 கோடி செலவில் 76,94,307 பேர் பயன்பெற்றுள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் மருத்துவமனைகள் என்று மொத்தம் 2,157 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் 1,320 குழந்தைகளுக்கு சிறப்பு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்பின்றி 1,414 செய்தியாளர்கள் குடும்பங்களின் பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 4276 திருநங்கைகள், 3322 முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள், அரசு மன நல காப்பகத்தில் சிகிச்சை பெறும் 520 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். மேலும், 17.06 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள், 29,787 தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தை சேர்ந்தவர்களும் பயனடைந்துள்ளனர்.

திட்டத்தின் பயன்கள்:

இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் 8 உயர் சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காதுவால் நரம்பு உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, செவிப்புல மூளை தண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சையின் கீழ் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தற்போது (ஜன.10) வரை ரூ.596.34 கோடி செலவில் 6,272 பேர் பயனடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Jan 11, 2025, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.