ETV Bharat / state

'160 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்!' - திருச்சி அறிவாலயம் திமுக கூட்டம்

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 46 தொகுதிகளில் 40இல் திமுக வெற்றிபெறும். தமிழ்நாடு முழுவதும் 160 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் நிலை உள்ளது என கே.என். நேரு குற்றஞ்சாட்டினார்.

திமுக கூட்டம்
திருச்சி திமுக கூட்டம்
author img

By

Published : Feb 28, 2021, 9:16 AM IST

திமுக திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு பேசுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் எத்தகைய உத்தரவுகளை வெளியிட்டாலும், அதை நிறைவேற்றுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். தற்போதைய அதிமுக ஆட்சியில், உள்ளாட்சித் தேர்தல் ஒழுங்காக நடைபெறாது.

அதனால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் முடிவுசெய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் செல்ல தேவையில்லை என்று நான் கூறினேன். அதை ஏற்று உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தோம். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெற்றது. இதன் காரணமாக நான் முதன்மைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றேன்.

டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 46 தொகுதிகளில் 40இல் திமுக வெற்றிபெறும். தமிழ்நாடு முழுவதும் 160 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் நிலை உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் எப்படி திமுகவுக்குப் பிரமாண்ட வெற்றி கிடைத்ததோ, அதேபோல் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியை டெல்டா மாவட்டங்கள் பெற்றுத்தரும்.

தலைமையிடம் நான் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கட்சியினர் அனைவரும் உழைக்க வேண்டும். ஆகையால் ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் நாம் அதை ஏற்று கடமையாற்ற வேண்டும். நேர்மையான ஆட்சியை ஸ்டாலின் நடத்திக் காட்டுவார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் 7,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். ஒரு தொகுதிக்கு சராசரியாக 30 பேர் வீதம் மனு அளித்துள்ளனர். அதனால் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அவர்களது வெற்றிக்குப் பாடுபட வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மார்ச் 7ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.