சென்னை: திருச்சியைச் சேர்ந்த ஜே.பி என்கிற ஜெயராம் பாண்டியன் திருச்சி மாவட்ட பாஜகவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இணைந்துள்ளார். இவர், தான் கட்சியில் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி பாஜகவில் கட்சியில் சேரும் திருமணம் ஆன பெண்களைக் குறிவைத்து அவர்களுடன் நெருக்கமான நண்பரைப்போல் பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஒருவரின் மனைவி திருச்சியைச் சேர்ந்தவர். இவரிடன் நண்பரைப்போல் பழகி கணவர் எடுக்கும் திரைப்படத்திற்குப் பணம் ஏற்பாடு செய்வதாகவும், அதற்காக முன்தொகை கொஞ்சம் தேவைப்படுவதாகக் கூறி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயராம் பாண்டியன் ஏமாற்றுவதை அறிந்த அந்தப்பெண் சென்னையில் இருக்கும் தனது கணவரிடம் கூறியிருக்கிறார். இயக்குநர், காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயராம் பாண்டியனை வலைவீசித் தேடி வந்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவானார்.
நீண்ட நாட்களாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பதுங்கியிருப்பதை அறிந்த சென்னை போலீசார் அவரை லாவகமாக கைது செய்து சென்னை அழைத்துச்சென்றுள்ளனர். அவர் மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்ட உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாஜகவில் முக்கிய பிரமுகர் என்று கூறிக்கொண்டு கட்சியில் சேரும் பெண்களிடம் நண்பர் போல் பழகி மோசடி வேலையில் ஈடுபட்ட புகாரில் சென்னை போலீசார் ஜெயராம் பாண்டியன் எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார். எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை