தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் ஐந்தாயிரத்து 967 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 352 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 614 ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.24) ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 962 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 119 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 712ஆக அதிகரித்தது.
மீதமுள்ள 947 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 105 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.