ETV Bharat / state

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி: தங்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 5, 2022, 9:45 AM IST

Updated : Dec 5, 2022, 11:19 AM IST

திருச்சி: நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் திருச்சி சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர்.தினேஷ் பங்கேற்றார். இதில் சப்-ஜூனியர் 66 கிலோ எடை பிரிவில் அவர் புதிய சாதனை படைத்தார். டெட் லிப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனையை முறியடித்து காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்தார்.

4 தங்கப்பதக்கம்: மேலும், இவர் ஸ்குவாட்டில் 200 கிலோ எடையை தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும், மொத்தம் 538 கிலோ எடையை தூக்கியதற்காக தங்கம் என்று 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

“ஸ்டிராங்மேன்-2” விருது: இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2” என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், ஏர்போர்ட், காமராஜ் நகரைச் சேர்ந்த எஸ்.ஷேக் அப்துல்லா 59 கிலோ எடைப் பிரிவில் டெட் லிப்ட் 170 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கமும், ஸ்குவாட்டில் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும், மொத்தம் 500 கிலோ எடையை தூக்கியதற்காக தங்கம் என்று நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி: தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

இந்நிலையில், சாதனை புரிந்த வீரர்கள் இருவரும் இன்று (டிச.5) விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு, ரோட்டரி சங்கம் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், வீரர்கள் இருவருக்கும் மாலை அணிவித்து பேண்டு வாத்தியங்கள் முழங்க, விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கம் மாவட்ட செயலாளர் இளங்கோ, தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஷ் குமார் உட்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்று வீரர்களை பாராட்டினர்.

இதையும் படிங்க: காமன்வெல்த்.. 6 பதக்கங்கள் வென்று திரும்பிய அமுத சுகந்திக்கு உற்சாக வரவேற்பு

Last Updated : Dec 5, 2022, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.