ETV Bharat / state

Trichy Aristo Bridge: இனி டிராஃபிக் ஜாம் இல்லை.. அரிஸ்டோ மேம்பாலத்தால் திருச்சி மக்கள் ஹேப்பி! - etvbharat tamil

திருச்சியில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலத்தின் பணிகள் நிறைவடைந்து, இன்று காலை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து சிக்கல் இருக்காது என திருச்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

trichy aristo bridge
அரிஸ்டோ மேம்பாலம்
author img

By

Published : May 29, 2023, 9:59 AM IST

Updated : May 29, 2023, 11:38 AM IST

நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் திறப்பு

திருச்சி: திருச்சி மாநகரில் மிகவும் பழமையான மற்றும் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்திற்குப் பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாகப் பாலத்தைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது.

இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் சென்னை - மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழ்நாடு அரசு தயங்கி வந்தது. எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப்படாததால், அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி நிறைவடையாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் கிடந்தது.

அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிதாகத் திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின.

மேலும் இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியிலிருந்து வாகனங்கள் ஏறி இறங்கவும், மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி இறங்கவும் முடியும். அதே வேளையில் ஜங்ஷன் ரயில் நிலையம் வழித்தடத்தில் வாகனங்கள் இறங்க மட்டுமே முடியும். ஜங்ஷன் பகுதியில் இருந்து ஏற முடியாது. இந்நிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இதனை தொடர்ந்து அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளுக்காக ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டமாகப் பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

பின்பு இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தை சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மாதங்களில் மேம்பாலம் பணிகள் முழுமையாக முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் டெண்டர் விடுவது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாகப் பாலம் திறப்பதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

இந்நிலையில் விடுபட்ட பாலத்தின் பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டது. 4 நாட்களுக்கு முன்பு பாலத்தின் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு வரும் 29 ஆம் தேதி மக்கள் பயன் பாட்டிற்காக அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்படும் என அப்டேட் கொடுத்தார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் அரிஸ்டோ மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் தற்போது புதுப்பொலிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாகத் திருச்சி - சென்னை - மதுரை நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் இந்த பாலத்தின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் ஓட்டுநரை கொலை செய்த குடும்பம்.. மதுரையில் நடந்த பகீர் சம்பவம்!

Last Updated : May 29, 2023, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.