திருச்சி: சமயபுரம் அருகே கொணலை ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவைச்சேர்ந்தவர், 59 வயதான விமலா ராணி. இவர் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள ராஜா பள்ளியில் ஆசிரியையாக வேலைசெய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை தனது பணியை முடித்துவிட்டு கல்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரிடம், வழி கேட்பதுபோல் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று கத்தியால் கையில் வெட்டிவிட்டு, 3 சவரன் செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் காயமடைந்த விமலா ராணி, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் அவருடைய கணவர் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:இரும்பு திருடிய இளைஞரை தாக்கி கொலை செய்த கட்டட பணியாளர்கள்