ETV Bharat / state

ரூ.50 லட்சமுள்ள நகைத்திருட்டு - திருடர்களை 4 மணி நேரத்தில் பிடித்தது எப்படி - விவரித்த திருச்சி கமிஷனர்! - திருச்சி மாவட்ட செய்தி

திருச்சியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைத் திருட்டில் ஈடுபட்டவர்களை 4 மணி நேரத்தில் பிடித்தது குறித்து மாநகர காவல் ஆணையர் விவரித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 27, 2023, 6:55 PM IST

ரூ.50 லட்சம் மதிப்பு நகை திருட்டில் ஈடுபட்ட திருடர்களை 4 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்!!

திருச்சி: பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை, 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது. இந்நிலையில் நான்கு மணி நேரத்தில் திருச்சி மாநகர காவல் துறையினர் அதிரடியாக திருடர்களை மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா கோட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் கூறியதாவது, “கடந்த 25ஆம் தேதி நகை செய்யும் ஆசாரியின் வீட்டில் இருந்து 1 கிலோ நகை திருடு போயிருந்ததாக எங்களுக்கு 8.30 மணிக்கு புகார் வந்தது. அப்புகாரின் பேரில் மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தோம். பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அதன் வாயிலாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்தோம்.

மொத்தமாக திருடு போன தங்க நகை, வெள்ளி, மற்றும் பணம் உள்ளிட்ட அனைத்தும் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகள் மீது ஏற்கனவே 18 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஏற்கனவே குண்டர் தடுப்பு காவல் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலில் இருந்து வந்த இரண்டாவது நாளே மீண்டும் நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

நகைக் கடை மற்றும் நகை சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பு லாக்கர்களில் நகைகளை வைத்து மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். இந்த வழக்கை பொறுத்தவரை சி.சி.டி.வி கேமரா திருடு போன வீட்டின் அருகிலேயே இருந்ததால் அதன் வாயிலாகவே காட்சிகளை கைப்பற்றினோம்.

மாநகரில் திருட்டுச் சம்பவங்களை குறைப்பதற்காக அதிகப்படியான சிசிடிவி கேமராக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். மேலும் முக்கியமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் 45 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 38 வழக்குகளை முழுமையாக கண்டுபிடித்து தீர்வு கொண்டு வந்துள்ளோம்.

சிறையிலிருந்து தண்டணை காலம் முடிந்து வெளியேறும் குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பெரிய கடை வீதிகளில் சின்ன சின்ன கடைகளில் கூட இது போன்று கிலோ கணக்கில் நகைகள் விற்கப்படுகிறது’’ என்றார்.

அவர்களுக்கான ஆலோசனை குறித்த கேள்விக்கு, ”கோத்ரேஜ் போன்ற நல்ல பாதுகாப்பு லாக்கர்களை வாங்கி - கிரில் கேட்ஸ் போட்டு மிகவும் பாதுகாப்பாக நகைகளை வைப்பது நல்லது. பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கண்டிப்பாக அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: திருச்சி சமயபுரம் கோயிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!

இதையும் படிங்க: 'காங்கிரஸ் குறித்து அவதூறு பரப்புகிறார்': அமித்ஷா மீது கர்நாடகாவில் போலீசில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.