ETV Bharat / state

கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர்! - கர்ப்பிணி மனைவி கொலை

திருச்சி: கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து கணவரே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

trichy
trichy
author img

By

Published : Feb 4, 2020, 9:32 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் கமல்காந்த் (33). இவரது மனைவி ஜீவிதா (26). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கமல்காந்த் சில வாரங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்தார்.

இந்நிலையில் இன்று கணவன் மனைவி இருவருக்கமிடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், இரண்டு மாத கர்ப்பிணி என்றும் பாராமல் ஜீவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து தானும் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர், ரத்தம் சொட்ட சொட்ட மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார்.

இதனைக் கண்ட கமல்காந்தின் தாய் அலறி சத்தம் போட்டு, அக்கம்பக்கத்தினரை அழைத்து மாடிக்குச் சென்று பார்த்தபோது ஜீவிதா ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர்

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கமல்காந்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த முசிறி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்துகொண்ட மகள் மீது ஆசிட் வீச்சு; கர்ப்பிணி என்றும் பாராத கொடூரத் தந்தை

Intro:திருச்சி அருகே கர்ப்பிணி மனைவியை கணவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:திருச்சி:

திருச்சி அருகே கர்ப்பிணி மனைவியை கணவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் கமல் காந் (33). இவரது மனைவி ஜீவிதா ( 26). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது .
கமல்காந் சிங்கப்பூரில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். ஜீவிதா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமல்காந் மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார் .மேலும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட கமல்காந் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்ததை பார்த்த அவரது தாய் அலறி சத்தம் போட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர் அங்கு ஜீவிதா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் செய்வதறியாது தவித்து உடனடியாக கமல்காந்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த முசிறி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பிணி மனைவியை கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.