திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராயன்பட்டி - புதுப்பட்டி பிரிவு சாலையில் தனிநபருக்குச் சொந்தமான புனித வீர சந்தியாகப்பர் கோயில் உள்ளது. 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். அக்கோயிலில் வழக்கம்போல் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலய உரிமையாளர் அங்கிருந்த CCTV-யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய இந்த கோயிலில் ஏற்கனவே நான்கு முறை கொள்ளை நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகாத்மா காந்தியின் அஸ்தி திருட்டு!