ETV Bharat / state

“விஜய் வந்தால் எல்லாம் மாறும்” - த.வெ.க மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் கூறியது என்ன?

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற்ற நிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்த பெண்களின் மன எண்ணங்களைப் பற்றி விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு.

விஜய், மாநாட்டிற்கு வந்த மகளீர்
விஜய், மாநாட்டிற்கு வந்த மகளீர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வந்தனர். இந்த மாநாட்டிற்கு வந்துள்ள பெண்கள் தவெக மாநாடு குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர்.

நிற்பதற்கு கூட இடமில்லை: ஆம்பூரைச் சேர்ந்த மாலதி கூறுகையில், “மிகவும் சந்தோஷமாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இந்த மாநாட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். அது இன்று நிறைவேறியது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் நேற்றே இந்த ஊருக்கு வந்து விட்டோம். அருகில் தங்கி விட்டு மீண்டும் காலையில் இங்கு வந்தோம். நேற்று ஓர் அளவுக்கு இடம் இருந்தது ஆனால் இப்போது நிற்பதற்கு கூட இடமில்லாமல் உள்ளது. திடீரென்று இவ்வளவு கடைகள், இவ்வளவு மக்கள் கூட்டம் எங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை.

பெரிய ஸ்டோரி: இருப்பவர்களிலேயே உச்ச நட்சத்திரம் என்று சொன்னால் அது விஜய் தான். அதேபோல மக்களுக்கு நல்ல விஷயம் சொல்லக்கூடிய திரைப்படங்களில் தான் இவர் நடிப்பார். அவர் அரசியலுக்கு வருவார் என்று ஏற்கனவே உள் மனது சொல்லிக் கொண்டே இருந்தது. அதேபோல அவர் வந்துவிட்டார். இந்த மாநாட்டில் குட்டி ஸ்டோரி அல்ல, பெரிய ஸ்டோரி சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம். நிறுத்தாமல் இரண்டு மணி நேரம் பேசப்போகிறேன் என்று சொல்கிறார். ஆர்வமுடன் காத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.

எதிர்பார்ப்பதை விட அதிகமாக செய்வார்: பின்னர் அவர்களுடைய மகன் தமன் பிரகாஷ் கூறுகையில், “நான் யுகேஜி படிக்கிறேன். நான் விஜயை நேரில் பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன். அவரை நேரில் பார்த்தால் நன்றி சொல்வேன்” என்றார். ஜெயந்தி கூறுகையில், “இவ்வளவு நாட்களாக அரசியலில் இருந்தது போல தெரியவில்லை. புதிதாக இருப்பது போல் தெரிகிறது. கண்டிப்பாக 2026ஆம் ஆண்டில் விஜய் தான் முதலமைச்சராக வேண்டும். அவருக்கு மக்கள் மீது அதிக பாசம் உள்ளது. ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: "தவெக மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகின்றனர்"-விஜய் மாநாடு குறித்து உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கிறது என அவருக்கு தெரியும். எனவே மக்களுக்காக நாம்தான் இறங்கி வரணும் என்ற உணர்வோடு அவர் வந்திருக்கிறார். சினிமா அனைத்தையும் விட்டுவிட்டு நமக்காக வந்திருக்கிறார். நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக அவர் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

காசுக்காக வந்தவர்கள் அல்ல: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசி கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். காலையில் என்னுடைய நண்பர்களிடம் இந்த மாநாடு குறித்து சொல்லிக் கொண்டே வந்தேன். நாங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் நண்பர்கள் ஆனவர்கள். நாங்கள் சந்திப்பது என்னுடைய அண்ணன்தான். எனவே அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். விஜய் வந்தால் எல்லாமே மாறும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளது. எல்லாம் கொடூரமாக நடந்து வருகிறது. விஜய் வந்தால் எல்லாமே மாறும். ஒரு சின்ன தவறு கூட நடக்காது. இது 100 சதவீதம் உண்மை. அதேபோல இங்கு வந்துள்ள சொந்தங்கள் அனைவரும் பணத்திற்காக வந்தவர்கள் அல்ல, காசு கொடுத்து வந்தவர்கள் அல்ல, தானாக சேர்ந்த கூட்டம். எந்த பிரச்சினை வந்தாலும் விஜய் தான் முதலாவதாக வந்து நிற்கிறார்” என்றார்.

வேலையையும் விட்டு வந்துள்ளோம்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சி கூறுகையில், “விஜயை பார்க்க வேண்டும் என்று ஆவலோடு, எங்கள் ஊரில் இருந்து நாங்கள் அனைவரும் கிளம்பி வந்தோம். நாங்கள் கூலி வேலை பார்க்கிறோம். எங்கள் வேலைக்கு நாள் ஒன்றுக்கு கூலி 400 ரூபாய். ஆனால் எங்களுடைய வேலையை விட்டுவிட்டு விஜயை பார்க்க வந்திருக்கிறோம். என்னதான் கூட்டமாக இருந்தாலும் தளபதியை பார்த்துவிட்டு தான் செல்வோம். எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும். அவருடைய படங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் எங்களுடைய கோரிக்கை” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.