ETV Bharat / state

திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளியில் பாதுகாப்புப் படை இயக்குநர் ஆய்வு

திருச்சி: திருச்சியில் உள்ள ரயில்வே பயிற்சி பள்ளி மற்றும் ஆயுதப்படை மைதானங்களை ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் அருண்குமார் ஆய்வு செய்தார்.

பாதுகாப்புப் படை இயக்குநர்
author img

By

Published : Mar 14, 2019, 6:05 PM IST

ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் ரயில்வே பயிற்சிப்பள்ளி, ஆயுதப்படை மைதானங்களை ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர்அருண்குமார் இன்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் பணிபுரிபவர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து 75 கம்பெனி வீரர்கள் நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 14 கம்பெனி வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் முறைகேடாக பணம் கொண்டு செல்வதையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வதையும், மது கடத்துவதையும் தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

The Director of the Security Forces
பாதுகாப்புப் படை இயக்குநர்

ரயில்வே பாதுகாப்பு படையில் 8,600க்கும் மேற்பட்ட வீரர்கள், 1,200 க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்களை நியமிக்க பட உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 450 ரயில்வே நிலையங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இன்னும் 6 ஆயிரம் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் ஆடைகளில் மைக்ரோ கேமரா பொருத்தும் திட்டம் உள்ளது", என்றார்.

ஆய்வின் போது தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் வீரேந்திரகுமார், கோட்ட பாதுகாப்பு ஆணையர் ஜெகநாதன், பயிற்சி பள்ளி உதவி பாதுகாப்பு ஆணையர் ரகுராம்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Intro:திருச்சியில் உள்ள ரயில்வே பயிற்சி பள்ளி மற்றும் ஆயுதப்படை மைதானங்களை ரயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் ஆய்வு செய்தார்.

Body:திருச்சி: தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு 14 கம்பெனி வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று ஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் அருண் குமார் கூறினார்.
ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் ரயில்வே பயிற்சிப்பள்ளி, ஆயுதப்படை மைதானங்களை ரயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் இன்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் பணிபுரிபவர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து 75 கம்பெனி வீரர்கள் நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 14 கம்பெனி வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்பு படையினர், முறைகேடாக பணம் கொண்டு செல்வதையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வதையும், மது கடத்துவதையும் தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளை கொண்ட பிரத்தியேக பிரிவு அமைத்து தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையில் 8,600க்கும் மேற்பட்ட வீரர்கள், 1,200 க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் நியமிக்கவும், பாதுகாப்பு குறைவாக உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள அனுமதிக்கப்படாத வழிகளை அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 450 ரயில்வே நிலையங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இன்னும் 6 ஆயிரம் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் ஆடைகளில் மைக்ரோ கேமரா பொருத்தும் திட்டம் உள்ளது என்றார்.

Conclusion:ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் ஆடைகளில் மைக்ரோ கேமரா பொருத்தும் திட்டம் உள்ளது என்று ஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் அருண் குமார் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.